ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசை இல்லாதொழித்து மைத்திரிபால சிறிசேனவின் அரசை எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் ஆரம்பிப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மலையத்தில் நேற்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த மைத்திரிபால சிறிசேனவின் அரசு வந்தால் மக்களின் அத்தியவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும். அரச துறையிலும், தனியார் துறையிலும் பணிபுரிகின்றவர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படும்.
புதிய பல்கலைக்கழகங்களும் பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படும். இந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களை நான்காவது இடத்திலும், முஸ்லிம் மக்களை மூன்றாவது இடத்திலும், சிங்கள மக்களை இரண்டாவது இடத்திலும், ராஜபக்ஷ இனத்தை முதலாவது இடத்திலும் வைத்துள்ளார்.
இதனால் ராஜபக்ஷ இனத்தை இல்லாதொழித்து நாங்கள் அனைவரும் ஒரு நாட்டு மக்களாக இணைந்து செயற்பட ஜனவரி 8ஆம் திகதி மூவின மக்களும் மைத்திரிபாலவின் அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்