ராஜஸ்தான் படுதோல்வியால்., சிஎஸ்கே அணிக்கு நீடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்பு!

18

 

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியுற்றதையடுத்து, சென்னை அணி உட்பட 6 அணிகளுக்கு இன்னும் பிளே ஆஃப் வாய்ப்பு நீடிக்கிறது.

ஐபிஎல் 15-ஆவது சீசனின் 58-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ஓட்டங்கள் எடுத்தது.

இதையடுத்து, களமிறங்கிய டெல்லி அணி 18.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் படுதோல்வி காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), டெல்லி கேப்பிடல்ஸ் (DC), சன் ரைசர்ஸ் ஐதராபாத் (SRH), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR), பஞ்சாப் கிங்ஸ் (PBKS), சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது.

ராஜஸ்தான் அணி அடுத்த 2 போட்டிகளில் ஒரு வெற்றியை பெற்றாலே பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE