ராஜஸ்தான் ராயல்ஸ் ஹாட்ரிக் வெற்றி! அடுத்தடுத்து அடிவாங்கும் மும்பை இந்தியன்ஸ்

103

 

ஐபிஎல் 2024 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.

வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் முதலில் துடுப்பாடியது.

முதல் ஓவரிலேயே டிரண்ட் போல்ட் மும்பை இந்தியன்ஸுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அவரது பந்துவீச்சில் ரோஹித் ஷர்மா டக் அவுட் ஆக, அடுத்த பந்திலேயே நமன் தீரும் டக் அவுட் ஆனார்.

அதன் பின்னர் இம்பேக்ட் வீரராக வந்த பிரேவிஸ் முதல் பந்திலேயே போல்ட் பந்துவீச்சில் பர்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதிரடியில் இறங்கிய இஷான் கிஷன் 16 ஓட்டங்களில் இருந்தபோது பர்கர் பந்துவீச்சில் அவுட் ஆனார். இதனால் மும்பை இந்தியன்ஸ் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா அதிரடியாக 21 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்தார். அதன் பின்னர் திலக் வர்மா 32 ஓட்டங்களில் வெளியேற, மும்பை இந்தியன்ஸ் விக்கெட்டுகளை பறிகொடுத்து 125 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. போல்ட், சாஹல் தலா 3 விக்கெட்டுகளும், பர்கர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் என தடுமாற, ரியான் பராக் ருத்ர தாண்டவம் ஆடி அணியை மீட்டார்.

இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 15.3 ஓவரில் 127 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது அந்த அணியின் தொடர்ச்சியான 3வது வெற்றி ஆகும்.

அரைசதம் விளாசிய பராக் 39 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் எடுத்தார். மும்பை இந்தியன்ஸ் 3 தோல்விகளை அடுத்தடுத்து சந்தித்ததால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

SHARE