ராஜீவ்காந்தி கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட இரகசியக் குறியீடு ‘கஞ்சிகுடிச்சாறு’ புலிகளின் ‘வயர்லஸ்’ தொடர்பை அறிந்தும் கோட்டை விட்டது இந்தியா.

303

இலங்கை விவகாரத்தை கவனித்து வந்த மத்திய உளவுப்பிரிவு றோ நீண்டகாலமாகவே புலிகளின் வயர்லஸ் தொடர்புகளை ஒட்டுக்கேட்க முயற்சி செய்து கொண்டிருந்தது. இவர்கள் முயற்சி செய்யும் விடயம் புலிகளுக்கும் நன்கு தெரியும் அதனால் புலிகளும் அவர்களுக்குப் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்தனர்.

52852852
புலிகளின் தகவல் தொடர்பாடல்கள் முழுவதுமே வயர்லஸ் றேடியோக்கள் மூலமே அக்காலத்தில் நடைபெற்று வந்தன. இந்த தொழில் நுட்பத்தில் அக்காலத்தில் றோவை விட புலிகள் திறைமைசாலிகளாக இருந்தனர். இந்த வயர்லஸ் தொடர்புகளுக்காக விடுதலைப்புலிகள் பல போராளிகளைத் திறமைசாலிகளாக்கி வைத்திருந்தனர். புலிகளின் பிரதானமான தளபதிகளுக்கும், புலிகளின் முக்கியஸ்தர்களுக்கும் பிரத்தியோகமாக வயர்லஸ் இயக்கும் போராளிகளைக் கொடுத்திருந்தார்கள். குறிப்பிட்ட முக்கியஸ்தர்கள் வெளியே செல்லும் போதெல்லாம் அவர்களுடன் இரகசியமான முறையில் இவர்களும் செல்வது வழக்கம். இந்தியப்படை இலங்கையில் இருந்து வெளியேறியபோது தமிழகத்தில் தங்கியிருந்த புலிகள் தமது தளங்களை விட்டு விட்டு இலங்கை சென்றுவிட்டார்கள். இந்த விடயம் றோவுக்குத் தெரியும். ஆனால் ஒரு சில வயர்லஸ் தொடர்பான போராளிகள் இந்தியாவில் தங்கியிருந்தார்கள். இந்தியாவில் இருந்து கொண்டு இந்த வயர்லஸ் தொடர்பாடல்கள் இடம்பெற்றது ஆனால், தமிழகத்தில் யார் எந்த இடத்தில் இருந்து பேசுகின்றார்கள் என்பதை மத்திய உளவுப்பிரிவினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தமிழகத்தில் இருந்து செல்லும் வயர்லஸ் தகவல்கள் சிலவற்றை இடைமறித்து பதிவு செய்தனர். அனைத்திலும் சந்தேகமான சொற்கள் இருந்தன அவற்றை றோ ஆல் சரியாகக் கண்டுபிடித்துக் கொள்ள முடியவில்லை. அதற்குக் காரணம் அன்றைய காலகட்டத்தில் றோவில் பணிபுரிய சிறப்புப் பயிற்சியாளர்கள் பிரிவு அமைந்திருக்கவில்லை.

ராஜீவ்காந்தி கொல்லப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட வயர்லஸ் செய்திகள் அதிகரித்துக்கொண்டே இருந்தன. இதை றோ பதிவு செய்தது சென்னை, மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து திடீரென வயர்லஸ் செய்திகள் அதிகரித்து வந்ததை இந்தியாவின் றோ கவனித்தும் பயனில்லாமல் போய்விட்டது. காரணம் அத்தொடர்பாடல்களை உரியமுறையில் கண்டுபிடிக்கமுடியவில்லை. இங்கு ஒரு விடயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும்
அல்ஹைதா தலைவர் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானில் வைத்துக்கொலை செய்வதற்கு அமெரிக்கா பயன்படுத்திய குறியீடு மியோமியோ என்பதாகும். அமெரிக்கா இன்று பயன்படுத்திய குறியீட்டை சுமார் இருபது வருடங்களுக்கு முன்பே விடுதலைப்புலிகள் பயன்படுத்தியது சிறப்பம்சமாகும். ‘மியோமியோ ஓவர்’ என்பது பின்லேடன் கொல்லப்பட்டுவிட்டார் என்பதை உறுதிசெய்வதாகும். இதே போன்று கஞ்சிகுடிச்சாறு ஓவர் என்பது ராஜீவ்காந்தி கொல்லப்பட்டுவிட்டார் அல்லது அது தொடர்பான நடவடிக்கை நிறைவு என்பதாகும்.
ராஜீவ்காந்தி கொலை நடந்த பின்னரே C.B.I சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்துக்கொண்டிருக்க றோ தாம் சில விடயங்களை அறிவதில் கவனம் செலுத்தியது. அதன் பிறகு முழு நேர வயர்லஸ் பதிவுகளை மேற்கொள்ள சிறப்புக் குழு ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இக் குழு நியமிக்கப்பட்டு சில வாரங்களிலேயே 50 சதவீதமான விடுதலைப்புலிகள் பயன்படுத்திய குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அந்நாட்களில் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான வயர்லஸ் தொடர்புகளில் புலிகள் மூன்று இரகசியக் குறியீடுகளைப் பயன்படுத்தி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் இரண்டு வயர்லஸ் குறியீடுகள் இந்திய றோவினால் உடைத்தெறியப்பட்டது. அவற்றில் ஒன்று ‘கஞ்சிகுடிச்சாற்றில் வாழைக்கு தண்ணீர் ஊற்றிவிட்டோம்’ என்பது இந்தியாவில் வந்து இறங்கிவிட்டோம் என்பதாகும், மற்றையது ‘வழைக்குலையை சந்தைக்கு ஏற்றிவிட்டோம்’ என்பது இலங்கைக்கு ஆயுதங்கள் வந்துவிட்டது என்று அர்த்தமாகும். சென்னையில் எங்கேயோ ஓர் மூலையில் இருந்து விடுதலைப்புலிகளின் தொடர்பாடல் நிலையம் இயங்கிக் கொண்டிருந்தது. அவை ஸ்ரேசன் -95 என்ற பெயரில் இயங்கியது இந்த நிலையத்திற்கும் இலங்கையில் இயங்கிய ஸ்ரேசன்-97 என்ற நிலையத்திற்கும் இடையேதான் ராஜீவ்காந்தி கொல்லப்படுவதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பு வயர்லஸ் மூலம் தகவல் பரிமாற்றங்கள் இடம்பெற்று வந்தன. 1991 மே முதல் இவ்விரு ஸ்ரேசன்களும் இயங்காமல் நின்றுவிட்டன. ஆனால் மற்றுமோர் பகுதியில் இருந்து புதிய வயர்லஸ் நிலையம் இயங்கத்தொடக்குவதை றோ கண்டுபிடித்தது. தமது தொடர்பாடல்களை இந்தியாவின் றோ இடைமறித்துக் கண்டுபிடித்துவிட்டது. என்பதை அறிந்த விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவான ‘டெசி’ அறிந்து கொண்டு சென்னையில் அமைந்துள்ள வயர்லஸ் நிலையத்தை ஸ்ரேசன்-910 என்று தம்மை அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த ஸ்ரேசன்-91க்கு தகவல் வழங்கி வந்தது.
இதுவரைக்கும் கண்டு பிடிக்கப்பட்டாலும் இந்த தகவல் நிலையங்களக்கு இடையே நடந்த தகவல் பரிமாற்றங்கள் முழுவதையும் றோ அறிந்து கொள்ளமுடியவில்லை. இந்தியாவின் றோ வை விட அப்போது விடுதலைப்புலிகளின் ‘டெசி’ சிறப்பாக இயங்கிவந்தது. விடுதலைப்புலிகளின் வயர்லஸ் நிலையங்களில், அதி நவீனமானவை வெளிநாடுகளில் பயன்படுத்தப்பட்ட வயர்லஸ் கருவிகள் உயர்ந்த பயிற்சி பெற்றவர்களால் இயக்கப்பட்டு வந்தன. தகவல் வழங்கும் போது இந்த அலைவரிசையில் இருந்து மற்றுமொரு அலைவரிசைக்கு விடுதலைப்புலிகள் தாவிவிடுவார்கள்.
சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தகவல் போய்க் கொண்டிருக்கும் போது இத் தகவல்களை றோவும் கேட்டுக்கொண்டிருப்பார்கள். திடீரென்று ஒரு வாக்கியத்தில் ஒரு ஊரின் பெயர் வரும் அந்த வாக்கியத்துடன் சென்னை மற்றும் யாழ்ப்பாண நிலையங்களை அந்த அலை வரிசையில் இருந்து மறைத்து விடுவார்கள். இதனிடையே அடுத்த விநாடி மற்றுமொரு அலைவரிசையில் அவர்களின் வயர்லஸ் தகவல் பரிமாற்றம் ஆரம்பிக்கும். றோவும் இவர்கள் தமது உரையாடல்களை முடித்துவிட்டார்களா? அல்லது மற்றுமொரு அலைவரிசைக்கு பாய்ந்து விட்டார்களா? என்று தலையை உடைத்துப் பிய்த்துக் கொள்வார்கள். இதை றோ இல் பணியாற்றிய தமிழ் அதிகாரிகள் கண்டுபிடித்தும் கூட றோவுக்கு பெரிதாகப் பயன்படவில்லை காரணம் உயர் அதிகாரிகள் எப்போதும் தமிழர்களாக இருக்கவில்லை. வேறு மாநிலத்தவர்கள் பணியில் உள்ளபோது குறிப்பிட்டசொல் தமிழ் நாட்டில் உள்ள ஒரு ஊரின் பெயர் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மற்றுமொரு சிக்கல் என்னவென்றால், விடுதலைப்புலிகள் இலங்கையில் உள்ள சில ஊரின் பெயர்களையே பயன்படுத்தி வந்தனர்.
ராஜீவ்காந்தியைக் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ‘காஞ்சிகுடிச்சாறு’ என்ற ஊரின் பெயரை அன்றைய மூத்த தளபதிகளில் ஒருவரான கரிகாலன் இடமிருந்தே கேட்டறிந்து கொண்டார் பிரபாகரன். அன்று கரிகாலன் பிரபாகரனுக்கு அடுத்தபடியாக இருந்து வந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதை அடுத்து விடுதலைப்புலிகள் குடி வகைகளின் பெயரையும் இடையிடையே பயன்படுத்துவார்கள்.

கஞ்சிகுடிச்சாறு என்ற பெயரைப் பயன்படுத்தியது இந்திய றோவுக்கு ஒர் சிக்கலான விடயத்தினைத் தோற்றுவித்தது காரணம் இரு ஓர் உணவா? அல்லது பானமா? அல்லது ஓர் நதியா என்ற சிக்கல் தோன்றியமையே. இதற்கிடையில் புலிகள் மற்றுமோர் அலைவரிசைக்குப் பாய்ந்துவிடுவார்கள். 50 முதல் 60 சத வீதமான குறியீட்டுத் தகவல்களே இந்திய உளவுப்பிரிவினரால் அறிந்து கொள்ளமுடிந்தது. இந்திய இராணுவம் இலங்கையில் காலடி வைத்த போதிலும் விடுதலைப்புலிகளின், இரகசியக் குறியீடுகளைப் பெரிதளவில் அறிந்து கொள்ளமுடியவில்லை இதன் காரணமாக விடுதலைப்புலிகளின் முப்பது வருடகாலப் போராட்டம் தொடர்வதற்கு வழியமைத்தது. விடுதலைப்புலிகளின் இராணுவத் தளபதியாக அப்போது இருந்த கருணா அம்மானின் பிரிவினரால் விடுதலைப்புலிகளின் 75 சதவீதமான வயர்லஸ் உரையாடல்களைக் காட்டிக் கொடுக்கப்படடதாகவும், அதன் பின்னரே விடுதலைப்புலிகளின் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் கருத்துத்தெரிவித்துள்ளனர். இது பற்றிய உண்மை உரியவர்களுக்கே தெரியும்.

-றெற்றிப்பொறியன்-

SHARE