ராணுவத்தின் பாலியல் தாக்குதல்கள் குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்புக் கோரிய தலைமை அதிகாரி

176

 

கனேடிய ராணுவத்தில் இடம்பெறும் பாலியல் ரீதியிலான தாக்குதல்கள் குறித்து சர்ச்சைக்குரிய ரீதியில் கருத்து தெரிவித்த கனேடிய ராணுவ தலைமை அதிகாரி கேணல் டொம் லோசன் மன்னிப்புக் கோரியுள்ளார்.கனேடிய இராணுவ தலைமை அதிகாரி கேணல் டொம் லோசன் அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.அதில் பேசிய அவர், பாலியல் ரீதியான தாக்குதல்கள் தமது படையில் தற்போதும் ஒர் பிரச்சினையாக உள்ளதாக தெரிவித்தார்.பெண்களை வலுக்கட்டாயப்படுத்த உயிரியல் ரீதியில் ஏதுவான காரணிகள் ஆண்களுக்கு உள்ளதாக அவர் கூறினார்.லோசனின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் உடனடியாகவே கடும் எதிர்ப்பு வெளியானது.

இந்நிலையில், ராணுவத்தில் இடம்பெறும் பாலியல் ரீதியிலான தாக்குதல்களுக்கு உயிரியல் ரீதியில் ஏதுவான காரணிகள் ஆண்களுக்கு உள்ளதாக தான் தெரிவித்த கருத்துக்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

SHARE