டோலிவுட் இளம் நடிகர்களில் ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாபு, ராம் சரணுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இயக்குனர் ஸ்ரீனு வைத்லா இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ராம் சரண் தேஜா. ஏற்கனவே ஸ்ரீனு வைத்லா இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ‘ஆகடு‘ படம் ஹிட் ஆகாதபோதும் இயக்குனரின் திறமை மீது ராம் சரண் நம்பிக்கை வைத்திருப்பதால் அவரது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதில் ராம் சரண் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். கதைப்படி மற்றொரு ஹீரோயினும் தேவைப்படு வதால் அதற்கான தேடுதலை தொடங்கி இருக்கிறார் இயக்குனர். இந்த கதாபாத்திரத்துக்கு தன்னை ரெகமண்ட் செய்யும்படி நித்யா மேனன் உள்ளிட்ட ஒன்றிரண்டு நட்பு நடிகைகள் சமந்தா காதை கடித்துள்ளார்களாம். ஏற்கனவே தான் நடிக்கும் ஒரு தெலுங்கு படத்தில் நித்யா மேனனுக்கு சிபாரிசு செய்து சான்ஸ் பெற்று தந்தார் சமந்தா. அதேபோல் ராம் சரண் படத்திலும் நித்யா மேனன் அல்லது மற்றொரு தோழி நடிகை பிரணிதாவுக்கு பரிந்துரை செய்ய எண்ணி உள்ளாராம். அவரது சிபாரிசு எடுபடுமா என்பது பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்