ரிசாட்டின் இடத்திற்கு சிறிரெலோக் கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தெரிவுசெய்யப்படலாம்.

356

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆளுங்கட்சியில் இருந்து விலகியதையடுத்து அவரின் அமைச்சுப் பதவிக்கு சிறிரெலோக்கட்சியின் செயலாளர் உதயராசா தெரிவுசெய்யப்படலாம் என ஜனாதிபதி வட்டாரங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளன. கட்சியின் கொள்கை மாறாது நீண்டகாலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அவருடைய ஆட்சி நிலைபெறுவதற்கு உந்துசக்தியாக இவர் செயற்பட்டுவந்தமையே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் இவரின் முன்னைய செயற்பாடுகள் குறித்து மஹிந்த ராஜபக்ஷவின் புலனாய்வுப்பிரிவினர் ஆராய்ந்துவருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

SHARE