ரிசாத் பதியுதீன் ஆவணங்கள் மகிந்தவிடம் இல்லை-மகிந்தவின் பிரசாரக் கூட்டங்களில் ரிசாத் பங்கேற்காதது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு!

426

 

வன்னியிலும், மட்டக்களப்பிலும் நடைபெற்ற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில், ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பங்கேற்காமல் ஒதுங்கியுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இன்னமும், தமது ஆதரவு யாருக்கு என்று அறிவிக்கவில்லை.

முன்னதாக, ஜனாதிபதிக்கு ஆதரவு அளித்துள்ளதாகவும், ஆதரவு அளிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியான போதிலும், அண்மையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளையடுத்து, எந்த முடிவையும் எடுக்காமல் இழுத்தடித்து வருகிறது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் முல்லைத்தீவு, முள்ளியவளையில் நடந்த பிரசாரக் கூட்டத்திலும், நேற்று காத்தான்குடி, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் நடந்த பிரசாரக் கூட்டங்களிலும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்கேற்றிருந்தார்.

எனினும், இந்த பிரசாரக் கூட்டங்களில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை.

அமைச்சர் ரிசாத் பதியுதீன், இந்தக் கூட்டங்களில் பங்கேற்காதது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, இந்த தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்ற விடயத்தில், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SHARE