ரிஷப் பண்ட் தொடர்பில் பயிற்சியாளர் லட்சுமணின் கருத்து

132

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் ரிஷப் பண்ட்க்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் என்று தற்காலிக பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மன் கூறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் உச்சம் தொட்டுள்ள ரிஷப் பண்ட், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய மண்களில் சதம் விளாசி பெரிய சாதனை படைத்திருக்கிறார்.

எனினும் ரிஷப் பண்டால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்படுத்திய தாக்கத்தை, ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் ஏற்படுத்த முடியவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட் 6, 11, 15, 10 ஆகிய ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார். அதுவும் டி20 கிரிக்கெட்டில் ரிஷப் பண்டின் ரெக்கார்ட் மோசமாக உள்ளது.

நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக மூன்று ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக அரை இறுதியில் ஆறு ரன்கள் மட்டுமே ரிஷப் பண்ட் அடித்திருக்கிறார்.

இது குறித்து பயிற்சியாளர் லட்சுமணன் கூறியதாவது, நாங்கள் அனைத்து தரப்பு வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்குகிறோம் .அதே சமயம் யாரெல்லாம் அணியில் தேர்வு செய்யப்படவில்லையோ அதற்கான காரணத்தையும் கூறி விடுகிறோம். மிகவும் முக்கியம் பேட்டிங் வரிசையில் நம்பர் நான்காவது இடத்தில் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி இருக்கிறார்.

ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அவர் சதம் விளாசி ரொம்ப நாள் கூட ஆகவில்லை. எனவே அவருக்குப் போதிய ஆதரவு வழங்குவது மிகவும் முக்கியம். ரிஷப் பண்ட் இந்தியாவில் முக்கியமான வீரர். ஒவ்வொரு போட்டியிலும் எத்தனை பேட்ஸ்மேன்கள் வேண்டும் எத்தனை பந்துவீச்சாளர்கள் வேண்டும் என்று யுத்திகளுக்கு தகுந்தவாறு தேர்வு செய்து அணியை களம் இருக்கிறோம்.

இந்திய அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் நிறைய பேர் உள்ளனர். இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களை பார்த்தாலே உங்களுக்கு அது புரியும். இதேபோன்று டி20 கிரிக்கெட் பேட்ஸ்மன்களுக்கு கூடுதல் நம்பிக்கையை அளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் பெரிய ஷாட்கள் அடித்து ரன்கள் குவிக்க முடியும்.

பயிற்சியாளராக நான் திருப்திகரமாக செயல்படுகிறேன் என்று நினைக்கிறேன். ஆனால் நியூசிலாந்து தொடர் மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. ஏனென்றால் வானிலை காரணமாக எங்களுக்கு முழு போட்டியும் கிடைக்கவில்லை. மழை நிற்பதும் தொடங்குவதும் என போட்டி சென்றது. இளம் வீரர்களுடன் பயிற்சியாளராக செயல்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

SHARE