ரூ.1.5 கோடிக்கு ஏலம் போன ஐ-போன்

180

2007-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழைய ஆப்பிள் ஐ-போன் ஏலத்தில் விடப்பட்டது. போனில் உள்ள சிறப்பம்சங்கள் தான் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போக காரணம் என தெரிவித்துள்ளனர்.

ஆப்பிள் ஐ-போன்களின் விலை வழக்கமாகவே மற்ற போன்களின் விலையை விட அதிகம் என கேள்விபட்டிருப்போம். அதே நேரம் பழைய மாடல் ஆப்பிள் ஐ-போன் ஒன்று ரூ.1.5 கோடிக்கு ஏலம் போய் உள்ளது.

2023-ம் ஆண்டிற்கான கோடை கால பிரீமியர் ஏலத்தை எல்.சி.ஜி. நிறுவனம் நடத்தியது. இதில் 2007-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழைய ஆப்பிள் ஐ-போன் ஏலத்தில் விடப்பட்டது.

ஆரம்ப விலையாக 10 ஆயிரம் அமெரிக்க டாலர் அறிவிக்கப்பட்ட நிலையில், ஏலம் முடிவில் அந்த ஐ-போன் 1 லட்சத்து 90 ஆயிரத்து 322 அமெரிக்க டாலருக்கு விற்பனை ஆகி உள்ளது.

இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.56 கோடி ஆகும். இந்த போனில் உள்ள சிறப்பம்சங்கள் தான் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போக காரணம் என தெரிவித்துள்ளனர்.

maalaimalar

SHARE