ரூ.15,000க்கு Jio Cloud Laptop., ரிலையன்ஸின் புதுமையான முயற்சி..

82

 

சமீப காலமாக லேப்டாப் பயன்பாடு அதிகரித்துள்ளது. கொரோனாவுக்குப் பிறகு, அனைத்துத் துறைகளும் டிஜிட்டல்மயமாகிவிட்டதால் இவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக கல்வித்துறையில் லேப்டாப் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் இவற்றின் விலை அதிகமாக உள்ளதால் மாணவர்களின் பெற்றோர்கள் செகண்ட் ஹேண்ட் லேப்டாப் பக்கம் சாய்ந்துள்ளனர். அவையும் சுமார் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை இருக்கும்.

இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. மலிவு விலையில் மடிக்கணினிகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. ரூ. 15,000 மடிக்கணினியை சந்தைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை தொடங்கியுள்ளது.

இவற்றை கிளவுட் லேப்டாப் (Cloud Laptop) என்ற பெயரில் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை ஜியோ செய்து வருகிறது. Acer, HP மற்றும் Lenovo போன்ற நிறுவனங்களுடன் ஏற்கனவே இதுகுறித்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இது பற்றிய முழு விவரங்களை இப்போது பார்ப்போம்..

கிளவுட் ஸ்டோரேஜ்..
இந்த லேப்டாப்பில் processor மற்றும் storage இல்லை. இரண்டும் ஜியோ கிளவுட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மடிக்கணினி ஒரு டம்ப் டெர்மினலைக் கொண்டுள்ளது மற்றும் வேகமான செயல்திறனைக் காட்டுகிறது. இதன் மூலம் பயனர்கள் அனைத்து சேவைகளையும் வேகத்தில் அணுக முடியும். மேலும், மடிக்கணினியின் விலையை அபரிமிதமாக அதிகரிக்கும் memory storage மற்றும் processor-ஐ கிளவுட் மூலம் வழங்க முடியும், இதனால் மடிக்கணினியின் ஒட்டுமொத்த விலை குறைகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ‘கிளவுட் லேப்டாப்’ முழு விவரம்..
தற்போது, ​​ஒரு நல்ல மடிக்கணினி வாங்கவேண்டும் என்றால் சுமார் ரூ. 50,000 செலவழிக்க வேண்டும். ஆனால், ரிலையன்ஸ் ஜியோ வெறும் ரூ. 15,000 மட்டுமே.

நாட்டின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டரான ரிலையன்ஸ், ஏசர், ஹெச்பி மற்றும் லெனோவா போன்ற முன்னணி லேப்டாப் தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்னும் சில மாதங்களில் இந்த லேப்டாப் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

HP Chromebook ஏற்கனவே முன்மொழியப்பட்ட கிளவுட் பிசிக்கான சோதனைகளை நடத்தி வருவதாகத் தெரிகிறது. இது ஜியோவின் இரண்டாவது லேப்டாப் ஆகும். ஜூலை மாதம், ஜியோபுக் ரூ. 16,499 கிடைக்கப்பெற்றுள்ளது.

ஜியோ புக் ஆனது Jio OS இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது என்றாலும், புதிய சாதனம் விண்டோஸ் உள்ளிட்ட பிற operating systemகளில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் வரவிருக்கும் கணினிக்கான மாதாந்திர சந்தாவை வழங்குகிறது; சந்தாவின் ஒரு பகுதியாக, பல அம்சங்கள் அதனுடன் தொகுக்கப்பட்டுள்ளன.

SHARE