ரூ.750 வரை Cashback வழங்கும் BHIM App., இதை எப்படி பெறுவது?

98

 

BHIM செயலி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கேஷ்பேக் சலுகைகளை வழங்குகிறது.

Paytm என்ற Payment செயலிக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்த பிறகு, பலர் மற்ற பேமெண்ட் ஆப்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையில், BHIM செயலி கேஷ்பேக் ஆஃபர்களை வழங்கி வருகிறது, அதைப் பெற சில வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது.

BHIM செயலி தற்போது ரூ.750 வரை வெகுமதிகளை வழங்குகிறது.

இந்த கேஷ்பேக் ஆஃபர் அதிக வாடிக்கையாளர்களை பீம் செயலிக்கு ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Google Payவை போலவே பயனர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்தும் பாதையில் BHIM உள்ளது என்று கூறலாம்.

BHIM Pay இரண்டு வெவ்வேறு கேஷ்பேக் சலுகைகளை வழங்குகிறது, அவற்றை இணைத்தால் ரூ.750 பணத்தை திரும்பப் பெறலாம்.

மேலும் 1% கூடுதல் கேஷ்பேக் கிடைக்கும். இந்த சலுகைகளை எவ்வாறு பெறுவது என்பதை பாப்போம்.

ரூ. 600+ ரூ.150 பணத்தை திரும்பப் பெறுவது எப்படி?
வெளியில் உள்ள உணவகங்களில் உணவை ரசிக்க விரும்புபவர்கள் மற்றும் அடிக்கடி பயணம் செய்ய விரும்புபவர்கள் BHIM-ல் ரூ.150 cashback பெறலாம்.

இந்த செயலி மூலம் உணவு கட்டணம் மற்றும் பயண செலவுகளை செலுத்தினால், குறைந்தபட்சம் 100 ரூபாய் பரிவர்த்தனைக்கு ரூ.30 வரை தள்ளுபடி கிடைக்கும்.

merchant UPI QR code-ஐ பயன்படுத்தி செய்யப்படும் ரயில்வே டிக்கெட் முன்பதிவுகள், வண்டிப் பயணங்கள் மற்றும் உணவகக் கட்டணங்கள் ஆகியவை இந்தச் சலுகையின் கீழ் வரும்.

இதில் அதிகபட்சம் ரூ.150 வரை cashback பெறலாம். இந்த குறிப்பிட்ட தொகையைப் பெற, வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 5 முறை இந்தச் சலுகையைப் பயன்படுத்தவேண்டும்.

ரூ.600 Cashback பெறுவீர்கள்
அனைத்து merchant UPI பேமெண்ட்களிலும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.600 வரை பணத்தை திரும்பப் பெறலாம்.

100 ரூபாய்க்கு மேலே உள்ள முதல் மூன்று பரிவர்த்தனைகளில் ரூ.100 cashback பெறலாம்.

இது தவிர ஒவ்வொரு மாதமும் ரூ.200க்கு மேல் 10 பரிவர்த்தனைகளுக்கு ரூ.30 கேஷ்பேக் கிடைக்கும். ஆக மொத்தம் ரூ 600 cashback பெறுவீர்கள்.

கூடுதல் 1% பெறுவது எப்படி?
மேலே விவரிக்கப்பட்ட சலுகைகளைத் தவிர, BHIM உர்ஜா 1% திட்டத்தையும் (Urja 1 percent scheme) கொண்டுள்ளது. இதைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் CNG, Diesel மற்றும் Petrol வாங்கும் போது 1% திரும்பப் பெறுவார்கள்.
மேலும், பரிவர்த்தனை தொகை ரூ. 100 அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால், Electricity, Water மற்றும் Gas Bill போன்ற utility bill paymentகளுக்கு இந்த சலுகை நீட்டிக்கப்படுகிறது.

இந்த சலுகையின்மூலம் பெரும் Cashback தொகையானது அவ்வப்போது BHIM செயலியுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் நேரடியாக credit செய்யப்படும்.

SHARE