ரொம்ப மோசமா ஆடுறாங்க! CSK அணியில் இருந்து கழற்றிவிடப்படும் 3 முக்கிய வீரர்கள்

24

 

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிய சில முக்கிய வீரர்கள் அடுத்தாண்டு அணியில் இருந்து கழற்றிவிடப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பு சாம்பியனாக ஐபிஎல் தொடரில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் தொடரிலிருந்து வெளியேறியது.

இதனால் சிஎஸ்கே அணி, அடுத்த ஆண்டிற்கான அணியை கட்டமைக்கும் முயற்சியில் தற்போதே இறங்கிவிட்டது. இந்த நிலையில் இந்தாண்டு விளையாடிய சில முக்கிய வீரர்கள் அடுத்த ஆண்டு விளையாட மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கிறிஸ் ஜார்டன்

ஐபிஎல் மெகா ஏலத்தில் கிறிஸ் ஜார்டனை 3 கோடியே 60 லட்சம் ரூபாய் கொடுத்து சிஎஸ்கே வாங்கியது. நடப்பு சீசனில் 4 போட்டியில் விளையாடினாலும், சிஎஸ்கே காலம் முழுவதும் பயப்படும் வகையில் சில சம்பவங்களை ஜார்டன் செய்துவிட்டார். வெறும் 2 விக்கெட்டை மட்டுமே அவர் வீழ்த்தினார், இதனால் அடுத்தாண்டுக்கான அணியில் அவர் இடம்பிடிக்க வாய்ப்பே இல்லை என சொல்லப்படுகிறது.

ரொம்ப மோசமா ஆடுறாங்க! CSK அணியில் இருந்து கழற்றிவிடப்படும் 3 முக்கிய வீரர்கள்

ராபின் உத்தப்பா

37 வயதான ராபின் உத்தப்பா,நடப்பு சீசனில் 12 போட்டியில் விளையாடி 2 அரைசதம் உள்பட 230 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். மற்ற போட்டியில் சொதப்பியதால், சென்னை அணியின் பேட்டிங்கே கொஞ்சம் தடுமாறியது. இதனால் ராபின் உத்தப்பா, அடுத்த சீசனில் சிஎஸ்கே அணியில் இடம்பெறுவது சந்தேகமே.

ரொம்ப மோசமா ஆடுறாங்க! CSK அணியில் இருந்து கழற்றிவிடப்படும் 3 முக்கிய வீரர்கள்

டிவைன் பிரிட்டோரியஸ்

தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் பிரிட்டோரியஸ், சென்னை அணிக்கு வந்ததுமே பெரும் எதிர்பார்ப்பு எற்பட்டது. முதல் போட்டியில் விளையாடிய பிறகு, சில போட்டியில் அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. மீண்டும் அணிக்கு திரும்பினாலும் எதிர்பார்த்த செயல்பாட்டை அவர் தரவில்லை. இதனால் 6 போட்டியில் விளையாடி 44 ரன்கள் மட்டுமே அடித்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

SHARE