லசந்த விக்ரமதுங்க கொலை: மேர்வின் சில்வா சி.ஐ.டியிடம் வாக்குமூலம்

371
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் தகவலளித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இவர் இன்றைய தினம் தகவல் வழங்கியதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்களை வழங்குவதற்காக தாம் இரகசிய பொலிஸாரிடம் சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களும் தனக்கு தெரியும் முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

லசந்த விக்ரமதுங்க காரில் பயணித்து கொண்டிருந்த போது கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி கல்கிஸ்சையில் வைத்து இனந்தெரியாதோரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE