லட்சுமிமேனன் பாடியதற்கான சம்பளத்தை வாங்க மறுத்துள்ளார்….

394


சி
னிமாவில் பின்னணி பாடகியாகவும் வலம் வரவேண்டுமென்று சில நடிகைகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் அதற்கான வாய்ப்புகளையும் தேடிவருகின்றனர். அப்படி ஆர்வத்துடன் பாடுவதற்கான வாய்ப்புகளை தேடிக்கொண்டிருப்பவர்களில் குறிப்பிடத்தக்கவரான லட்சுமிமேனன். முதலில் இமான் இசையமைப்பில் ஒரு ஊர்ல ரெண்டு ராகா படத்தில் குக்குரு குக்குரு என்ற பாடலை பாடினார். அதனை தொடர்ந்து தற்போது பிரச்சாந்த் நடித்து வரும்  சாகசம் படத்தில் தமன் இசையில் ஒரு பாடலை பாட லட்சுமிமேனனை அழைத்துள்ளனர் சாகச படக்குழுவினர். உடனடியாக அந்தப்படத்தில் பாட சம்மதித்த லட்சுமிமேனன் உற்சாகத்துடன் அந்தப் பாடலையும் பாடி கொடுத்துள்ளார். அந்தப்பாடலைப் பாடியதற்காக லட்சுமிமேனனுக்கு சம்பளமாக ஓர் நல்ல தொகையை அவருக்கு கொடுக்க படக்குழுவினர் கொடுத்த போது அதனை வாங்க மறுத்த லட்சுமிமேனன், நீங்கள் என்னை பாட அழைத்ததே போதும் எனக்கு சம்பளம் வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

SHARE