லண்டனில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி!

170

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், சுதந்தர தினத்தன்று லண்டனில் உள்ள ஓ2 அரங்கில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.

இதுபற்றி அவர் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: லண்டனில் உள்ள ரசிகர்கள், நண்பர்களே, உங்களை ஆகஸ்ட் 15 அன்று லண்டன் ஓ2 அரங்கில் சந்திக்கிறேன் என்றார்.

இந்த இசை நிகழ்ச்சியில் நீத்தி மோகன், ஜாவத் அலி, கார்த்திக், ஹரிசரண், ஜொனிதா காந்தி, கட்டானி ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

SHARE