ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா தனது அப்பாவை வைத்து Motion Capture தொழில்நுட்பம் மூலம் கோச்சடையான் என்ற Animation படத்தை மிகுந்த பொருட்செலவில் எடுத்தார்.
இப்படம் விற்றது தொடர்பாக ஒரு தனியார் நிறுவனத்துக்கும், லதா ரஜினிகாந்துக்கும் ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் கோச்சடையான் படத்தின் உரிமையை தங்கள் கவனத்துக்கு கொண்டு வராமல் மோசடி செய்து இருக்கிறார் என்று அவர் பெயரில் வழக்கு போட்டுள்ளார் அபிர்சந்த்.
அது மட்டுமில்லாமல் பொய்யான ஆவணங்களை கொடுத்ததற்காக இன்று பெங்களூர் காவல் நிலையத்தில் லதா ரஜினிகாந்த் மீது FIR பதிவு செய்துள்ளனர்.