லிபியா பாராளுமன்றம் மீது போராளிகள் ஆக்ரோஷ தாக்குதல்: இருவர் பலி

493

லிபியா பாராளுமன்றம் மீது இன்று போராளிகள் நடத்திய ஆக்ரோஷ தாக்குதலில் இருவர் பலியாகினர்.

வாகனங்களில் கும்பலாக வந்த போராளிகள் பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், ராக்கெட்களை ஏவியும் நடத்திய அதிரடி தாக்குதலில் இருவர் பலியானதாகவும், 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமான நிலையம் உள்பட நகரின் பிரதான பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மூடப்பட்டு, தலைநகரில் வசிக்கும் மக்கள் பதற்றத்தில் இருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. முன்னாள் அதிபருக்கு ஆதரவான போராளிக் குழுவினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என அரசு கருதுகிறது.

இதற்கிடையில், சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்தை தாங்கள் கைப்பாற்றி விட்டதாகவும், விரைவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாகவும் போராளிகள் அறிவித்துள்ளனர்.

SHARE