லியோ மூலம் பல கோடி லாபத்தை அள்ளிய தயாரிப்பாளர் லலித்.. முழு விவரம் இதோ

90

 

மாபெரும் அளவில் இந்த வருடம் வசூல் செய்த திரைப்படங்கள் என்றால் அது விஜய்யின் லியோ மற்றும் ரஜினியின் ஜெயிலர் தான். இந்த பிரமாண்ட வசூல் சாதனைகள் மூலம் தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.

இதில் விஜய்யின் லியோ படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்த போதும் கூட, மக்களின் பேராதரவு காரணமாக மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.

இதுவரை நடிகர் விஜய்யின் கெரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக லியோ மாறியுள்ளார். மேலும் தமிழகத்தில் ரூ. 100 கோடி ஷேர் கொடுத்த முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் தட்டி சென்றுள்ளது.

லாபம்
இதுமட்டுமின்றி வெளிநாடுகளில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள லியோ படத்தின் மொத்த வசூல் ரூ. 598 கோடிக்கும் மேல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், லியோ படத்தின் லாபம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, லியோ படத்தின் மூலம் தயாரிப்பாளர் லலித்துக்கு ரூ. 99 கோடி வரை லாபம் கிடைத்துள்ளது. இதுவே லியோ படத்தின் வெற்றிக்கு ஆதாரம் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

SHARE