லீக் ஆன ஸ்மார்ட்போன் விவரங்கள்

351

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M14 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருந்தது. இதில் ஸ்மார்ட்போனின் பிராசஸர், ரேம், ஒஎஸ் போன்ற விவரங்கள் அம்பலமாகி இருந்தது.

தற்போது இதே ஸ்மார்ட்போன் விவரங்கள் பிஐஎஸ் தளத்தில் லீக் ஆகி இருக்கிறது. அந்த வகையில், புதிய சாம்சங் கேலக்ஸி M14 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். பிஐஎஸ் தளத்தில் சாம்சங் கேலக்ஸி M14 5ஜி ஸ்மார்ட்போன் SM-M146B/DS எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இத்துடன் கேலக்ஸி F14 5ஜி மாடலும் பிஐஎஸ் தளத்தில் SM-E146B/DS எனும் மாடல் நம்பருடன் பட்டியலிடப்பட்டு இருந்தது.

எனினும், இந்த வலைதளத்தில் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. கீக்பென்ச் லிஸ்டிங்கின் படி கேலக்ஸி M14 5ஜி மாடல் எக்சைனோஸ் s5e8535 பிராசஸர் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது எக்சைனோஸ் 1330 சிப்செட் ஆக இருக்கும் என தெரிகிறது. கீக்பென்ச் லிஸ்டிங்கில் இந்த ஸ்மார்ட்போன் பெற்று இருக்கும் புள்ளிகளை வைத்து பார்க்கும் போது, இது பட்ஜெட் ரக மாடலாக இருக்கும் என்றே தெரிகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது. கேலக்ஸி M14 5ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் என்றும் ஒன் யுஐ 5.0 ஸ்கின் வழங்கப்படுகிறது. கேலக்ஸி F14 5ஜி ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த கேலக்ஸி F13 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி F13 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஹெச் பேட்டரி, FHD+ டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா, எக்சைனோஸ் 850 பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

maalaimalar

SHARE