வங்கதேச தொடர்: மன்னிப்புடன் ஆட்டத்தை தொடங்கும் தென் ஆப்பிரிக்கா

178
வங்கதேச வான்வெளியில் ஆளில்லா விமானத்தை பறக்க விட்டதற்காக தென் ஆப்பிரிக்க அணி வங்கதேசத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது.இதன் முதல் டி20 போட்டி, வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ள நிலையில், தென் ஆப்பிரிக்க வீரர்கள் டாக்காவில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீரர்கள் பயிற்சி எடுப்பதை படமெடுப்பதற்காக ஆளில்லா விமானம் மைதானத்திற்கு மேலே பறவிடப்பட்டது. உடனே இது தொடர்பாக வங்கதேச பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் சென்றது.

இதனையடுத்து அவர்களின் உத்தரவின் பேரில் ஆளில்லா விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வங்கதேச வான் எல்லையில், முன் அனுமதியில்லாமல், ஆளில்லாத விமானம், ஹெலிகெப்டர் போன்ற ஊர்திகள் பறக்க கடந்த டிசம்பர் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது என தென் ஆப்பிரிக்க அதிகாரிகளுக்கு, வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

இதையடுத்து, வங்கதேச ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்பிடம், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நிர்வாகம், மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

SHARE