வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பிரணாப் முகர்ஜி மனைவி மரணச் சடங்கில் கலந்து கொள்ள இந்தியா வருகிறார்

401
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மனைவி சவ்ரா முகர்ஜி. 75 வயதாகும். இவர் இருதய கோளாறு மற்றும் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

கடந்த 7–ந்தேதி ஜனாதிபதி மாளிகையில் இருந்த சவ்ராவுக்கு திடீர் என்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே சவ்ரா உடல்நிலை திடீரென்று மோசம் அடைந்தது. டாக்டர்கள் அவரை காப்பாற்ற போராடினார்கள். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 10.51 மணிக்கு மரணம் அடைந்தார்.

நாளை நடைபெறவிருக்கும் சவ்ரா முகர்ஜியின் இறுதி சடங்கில் கலந்துக்கொள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டெல்லி வருகை தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் அவரது சகோதரி ஷேக் ரேஹனா மற்றும் வெளியுறவு அமைச்சர் ஏ.எச் மஹ்மூத் அலி ஆகியோரும் இந்தியா வருகிறார்கள்.

சவ்ரா முகர்ஜியின் மூதாதையர் வீடு வங்கதேசத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது

SHARE