வங்கதேச விளம்பரத்தால் வெடிக்கும் சர்ச்சை

151
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அரை மொட்டை அடித்து வங்கதேச பத்திரிக்கை சர்ச்சைக்குரிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.வங்கதேச சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி, வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இதனால் முதன் முறையாக வங்கதேசம் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து ‘புரோதோம் ஆலோ’ என்ற வங்கதேசத்தை சேர்ந்த வாரநையாண்டி பத்திரிகை இந்திய வீரர்களை அவமானப்படுத்தும் விதமாக சர்ச்சைக்குரிய விளம்பரம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது.

பத்திரிக்கையில் இடம்பெற்று உள்ள புகைப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, ரவிந்தர் ஜடேஜா, எம்.எஸ். டோனி, ஷிகர் தவான் மற்றும் அஸ்வின் ஆகியோர் அரை மொட்டை தோற்றத்துடன் உள்ளனர்.

மேலும், “நாங்கள் பயன்படுத்திவிட்டோம்… நீங்களும் பயன்படுத்த முடியும்,” என்று பேனரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அந்த பேனரில் இந்திய அணிக்கு எதிராக அசத்திய வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தாபிஜூர் கத்தியுடன் உள்ள புகைப்படமும் இடம்பெற்று உள்ளது.

முஸ்தாபிஜூர் இந்திய வீரர்களின் அரைதலையில் இருந்த முடியை நீக்கிவிட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சர்ச்சைக்குரிய விளம்பரத்தால் சமூகவலைதளங்களில் இரு நாட்டு ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

SHARE