வசாவிளான் மற்றும் வளலாய் பகுதிகளில் ஒருதொகுதி மக்களுக்கான மீள்குடியமர்வுக்கான காணிஉறுதிப்பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அவர்கள் உரியவர்களிடம் கையளித்தார்.

377

அண்மையில் விடுவிக்கப்பட்ட வசாவிளான் மற்றும் வளலாய் பகுதிகளில் ஒருதொகுதி மக்களுக்கான மீள்குடியமர்வுக்கான காணிஉறுதிப்பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அவர்கள் உரியவர்களிடம் கையளித்தார்.

10454452_754023054713399_7427341280085674141_n 11065871_754022928046745_1796011840063971586_n 11083861_754022971380074_8728064039361735729_n

வளலாய் வடக்குப் பகுதியில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் இன்றைய தினம் காணிஉறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இதன்பிரகாரம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழான வசாவிளான் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழான வளலாயிலும் மீளக்குடியேறும் ஒருதொகுதி மக்களுக்கு முதற்கட்டமாக காணிஉறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

10454452_754023054713399_7427341280085674141_n 11071726_10152718091572409_8925747125979265472_n 11077929_10152718092472409_7581710344298788389_n 11081311_10152718092577409_1688042948671613406_n 11084265_10152718090487409_927958926950196745_n

SHARE