வடகொரியாவில் அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து பலர் பலி

504

வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் 23 மாடிகளுடன் கூடிய அடுக்கு மாடி கட்டிடம் கட்டப்பட்டது. அதில் ஏற்கனவே 92 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்கியிருந்தனர். இருந்தும் அதன் மீது தொடர்ந்து கட்டுமான பணி நடந்தததால் பாரம் தாங்காமல் அக்கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.

அதில் சிக்கி பலர் பலியாகினர். ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். ஆனால் இந்த தகவல் வெளி உலகத்துக்கு தெரியாமல் மறைக்கப்பட்டது. ஆனால் அதை தென் கொரியா வெட்ட வெளிச்சமாக்கி விட்டது.

அதையடுத்து நடந்த சம்பவத்தை வட கொரியா ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் இந்த துயர சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. அது குறித்து மூத்த மந்திரி சோபு – 2 ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.

அதில், இது வடகொரியாவில் நடந்த கற்பனை செய்து பார்க்க முடியாத மிகப்பெரிய துயர சம்பவமாகும். விபத்து நடந்த இடத்துக்கு சென்று அதிபர் கிம் ஜாங் – யங் நேரில் சென்று பார்த்தார்.

இரவு முழுவதும் அங்கு தங்கியிருந்தார். ராணுவம் மற்றும் போலீசாரை வர வழைத்து மீட்பு பணிகளை பார்வையிட்டார். மக்கள் குடியிருக்கும் கட்டிடம் மீது மேலும் கட்டுமான பணி நடப்பதை சரிவர கண்காணிக்கவில்லை. அதற்காக வருத்தம் தெரிவிக்கிறோம் என அதில் கூறியுள்ளார்.

அவரை போன்று பல அதிகாரிகள் தங்கள் தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர்.

SHARE