வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தொடர்பான செய்திகள் உண்மையானவை அல்ல – சுரேஸ் பிரேமசந்திரன்

568
 images (6)

தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரசன்னம் தொடர்பான செய்திகள் உண்மையானவை அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு கிழக்கில் இராணுவத்தினரை தொடர்ந்தும் நிலைநிறுத்திக் கொள்ளும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறான வதந்திகளை கிளப்பி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
images (7)
தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கின்றார்கள் என சிங்கள மக்களுக்கு தொடர்ச்சியாக சொல்லி பீதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைதல் பற்றிய தகவல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கவில்லை, வேறும் அமைப்புக்கள் ஜனநாயக ரீதியில் வெளிநாடுகளில் இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். புலிகள் இயங்கி வருவதாக அமெரிக்கா குறிப்பிட்ட போதிலும் அது குறித்த சரியான தகவல்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதில் அரசாங்கத்திற்கு நாட்டம் இல்லை என்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபணமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE