வடக்கில் போதைப்பொருள் பாவனையை திட்டமிட்டு பரப்புவதற்கு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பின்னணி

337

 

வடக்கில் போதைப்பொருள் பாவனையை திட்டமிட்டு பரப்புவதற்கு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பின்னணியாக செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், மிகவும் சூட்சுமமான முறையில் யாழில் போதைப்பொருள் பரப்பிவிடப்பட்டுள்ளது.

1431054954_7760173_hirunews_Gota

 

சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின்போது, இது தொடர்பில் வைத்தியர்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் சில வைத்தியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. எவ்வாறெனினும், வடக்கில் மீண்டும் ஒரு ஆயுத போராட்டம் ஏற்படுவதை தடுக்கவே போதைப்பொருளை பயன்பாட்டிற்கு விடுவதாக, அப்போது பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என குறிப்பிடப்படுகிறது. வடக்கில் முன்னொருபோதும் இல்லாதவாறு தற்போது போதைப்பொருள் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில், யாழில் அதிகரிக்கும் குற்றச்செயல்களுக்கும் இதுவே காரணமென அண்மைய செய்திகள் தெரிவிக்கின்றன.

இவை திட்டமிட்ட முறையில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்கள் வெளிவந்த நிலையில், இத் தகவலானது அதனை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கும், போதைப்பொருளே பிரதான காரணமென கூறப்பட்டது. மொத்தத்தில், தமிழ் மக்களை திசைமாற்றி சிதைக்கும் ஒரு நடவடிக்கையை முன்னைய அரசாங்கம் மேற்கொண்டு வந்ததாக தமிழ்த் தலைமைகளும் விசனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE