வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர நிவாரணத்திற்கு ரூ.3 மில்லியன் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஒதுக்கீடு. பாதிக்கப்பட்ட இடங்களிற்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் நேரில் சென்று ஆய்வு.
வடக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் அவசர சுகாதார தேவைகளை பூர்த்தி செய்ய ரூ.3 மில்லியன் முதற்கட்டமாக அவசர நிதியாக சுகாதார அமைச்சரால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்திற்கு 1.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வுசெய்த வடக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை ,சமூகசேவைகள் ,நன்னடத்தை ,புனர்வாழ்வு , மகளிர் விவகார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர நிவாரணப் பொருட்களை வழங்கிவைத்தார்.