வடக்கு கிழக்கில் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை

77

 

அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேலும் புயலாக உருவாகும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகளுக்கு கடற்தொழிலாளர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

குழப்பம்
சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலும் காலியில் இருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலும் கடற்பரப்புக்கள் சிறிது கொந்தளிப்பாக காணப்படும்

இதற்கிடையில், தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல குழப்பம் காரணமாக இலங்கை முழுவதும் மழையுடன் கூடிய வானிலை மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் இந்த பலத்த மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்று
இதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.

எனவே, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

SHARE