வடக்கு, கிழக்கைச் சேர்ந்த இரு பெண்களை எமது கட்சியில் உள்வாங்கப்படுவதன்மூலம் தேசிய அரசியலில் எமது கட்சி பால் நிலை சமத்துவத்துடன் முழுமை பெறும்-எம்.ஏ. சுமந்­திரன்

146

 

பெண் பிரதிநிதிகளை உள்வாங்கும் வகையில் தேசியப் பட்டியல் ஆசனங்கள் அமையவேண்டும் எம்.ஏ. சுமந்­திரன் கோரிக்கை

sumanthiran_2

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குக் கிடைத்­துள்ள தேசியப் பட்­டியல் ஆச­னங்கள்

இரண்­டையும் பெண்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்தும் வகையில்
பயன்­ப­டுத்­த­வேண்­டு­மென யாழ்.தேர்தல் மாவட்­டத்தில் மூன்­றா­வது அதி­கூ­டிய
விருப்பு வாக்­கு­களைப் பெற்று தெரி­வான எம்.ஏ. சுமந்­திரன் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு வட­கி­ழக்கு தமிழ் மக்கள் ஒன்­று­பட்டு தமது
ஆணையை வழங்­கி­யுள்ளனர். அத­ன­டிப்­ப­டையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தேசிய
பட்­டியல் ஆச­னங்கள் உட்­பட 16 ஆச­னங்­களைக் கைப்­பற்றி தேசிய ரீதியில் மூன்­றா­வது
பெரும்­பான்மைப் பலத்தைப் பெற்­றுள்­ளது.

தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பைப் பொறுத்­த­வ­ரையில் தற்­போது
பாரா­ளு­மன்­றத்­திற்குத் தெரி­வான பிர­தி­நி­தி­களில் அனை­வரும் ஆண்­க­ளா­கவே
உள்­ளனர். எமது கட்­சியில் பெண்­களின் பிர­தி­நி­தித்­துவம்
அதி­க­ரிக்­கப்­ப­ட­வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்­சி­யாக முன்­வைக்­கப்­பட்டு
வரு­கின்­றது. பொதுத் தேர்­தலில் பெண்­க­ளுக்­கான ஆச­னங்கள்
ஒதுக்­கப்­பட்­டி­ருந்­த­போதும் எந்­த­வொரு பெண் பிர­தி­நி­தித்­து­வமும்
தெரி­வா­க­வில்லை. அவ்­வா­றி­ருக்­கையில் வட­கி­ழக்கில் பெண்கள் பல்­வேறு
பிரச்­சி­னை­களை எதிர்­நோக்கி வரு­கின்­றார்கள். பெண்­களைத் தலை­மைத்­து­வ­மாகக்
கொண்ட குடும்­பங்கள் பல­வுள்­ளன.

ஆகவே வட­கி­ழக்கைப் பொறுத்­த­மட்டில் பெண்­களின் குர­லாக பாரா­ளு­மன்றப்
பிர­தி­நி­தித்­து­வங்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில்
உள்­வாங்­கப்­ப­ட­வேண்டும். அதன்­மூலம் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை
எடுக்­க­மு­டியும் என்­பது கண்­கூடு.

எனவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குக் கிடைத்­துள்ள இரண்டு தேசியப் பட்­டியல்
ஆச­னங்­க­ளையும் வட­கி­ழக்கைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் இரண்டு
பெண்­க­ளுக்கு வழங்­க­வேண்டும் என்­பது எனது கோரிக்­கை­யாகும்.

இது­தொ­டர்பில் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர், கூட்­ட­மைப்பின் தலைவர் ஆகியோர் ஆவன
செய்­வார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

அதேவேளை பெண் பிரதிநிதித்துவங்கள் எமது கட்சியில் உள்வாங்கப்படுவதன்மூலம் தேசிய
அரசியலில் எமது கட்சி பால் நிலை சமத்துவத்துடன் முழுமை பெறும் என்பது எனது
நிலைப்பாடாகும் என்றார்.

SHARE