வடக்கு மாகாணத்தின் கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் மாதகல் கிராமத்தில் உணவு உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு… வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் திறந்து வைத்தார்…  

314

 வடக்கு மாகாணத்தின் கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் மாதகல் கிராமத்தில் உணவு உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு… வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் திறந்து வைத்தார்…
யாழ்ப்பாணம் மாதகல் தெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு, வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின், வடக்கு மாகாண சபையின் பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட உணவு உற்பத்தி நிலையமானது 23-03-2015 திங்கள் பிற்பகல் 3:00 மணியளவில் உத்தியோக பூர்வமாக வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது,
இந்நிகழ்விற்கு வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் எஸ்.தவராஜா அவர்களும், வடக்கு மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் அவர்களும், பிரதேச சபை தவிசாளர் மகேந்திரன் அவர்களும், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் திரு எஸ்.முரளிதரன் அவர்களும், வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் திரு ஜே.ஜே.சி.பெலிசியன் அவர்களும், காணி அன்பளிப்பாளர் திரு அதிகார சிங்கம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்,
இத்திட்டமானது இரண்டு மில்லியன் செலவில் மாதகல் தெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு அவர்களது வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கோடு வழங்கப்பட்டுள்ளது.
unnamed (1) unnamed (2)
SHARE