முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட கொடுப்பனவு செயற்திட்டம் .
வடக்கு மாகாண சபையினால் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவு செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டம் முல்லைத்தீவு மாவட்டத்திலே ஆரம்பித்து வைக்கப்பட்டது . வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த திட்டமானது அவ் அமைச்சின் அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் ஆரம்பித்துவைக்கபட்டது. இதன்படி கழுத்துக்குக் கீழ் செயலிழந்தவர்களுக்கு மாதாந்தம் 3 ஆயிரம் ரூபாவும்,இடுப்புக்குக் கீழ் இயங்க முடியாதவர்களுக்கு மாதம் 1,500 ரூபாவும் வழங்கப்படவுள்ளது. இந்த நிகழ்விலே விசேட தேவை உடையவர்களுக்காக முன்னெடுக்கப்படவுள்ள விசேட செயற்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் அவர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது. இந்த விசேட திட்டத்தின் முதற்க்கட்டம் அண்மையிலே வவுனியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.