வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் நிதியுதவியுடன் கொந்தக்காரன்குளம் மறிச்சுக்கட்டி வீதி திருத்தம்.

343

 

1996ம் ஆண்டு முதல் பாதுகாப்பு முன்னரனாக விளங்கிய கொந்தக்காரன்குளம் மற்றும் மறிச்சுக்கட்டியை உள்ளடக்கிய பிரதான வீதி 20 வருடங்களாக திருத்தவேலைகள் ஏதும் மேற்கொள்ளப்படாது பெரும் பற்றைக்காடுகளாக மாறியுள்ளது. தற்போது அப்பிரதேசத்திலே மக்கள் மீளக்குடியேறியுள்ள நிலையில் அவர்களின் போக்குவரத்து மிகவும் பிரச்சனையாகவே காணப்பட்டது. எனவே அப்பிரதேச மக்கள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அமைச்சர் அவர்கள் தனது பிரமாண அடிப்படையிலான நிதியிலிருந்து பிரதேச சபையின் ஊடாக இவ் வீதியை புனர்நிர்மாணம் செய்வதற்கான பணியை ஆரம்பித்துவைத்தார். இதன் மூலம் பல கிராம மக்கள் பயன் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

19720_890528987675187_6516134553596713809_n 10439397_890528701008549_2250104662953032420_n 11070961_890529101008509_7417635786997848522_n 11126914_890529034341849_6821848688839626836_n 11174939_890529214341831_8475462940508031232_n

SHARE