வடபகுதி மக்கள் புழு மாட்டிறைச்சியை சாப்பிட்டு சாவதா ? வடமாகாண சபை முதல்அமைச்சர் அவர்களே

519

வடபகுதி மக்கள் புழு மாட்டிறைச்சியை சாப்பிட்டு சாவதா ?
நீங்கள் இன்று ஆசனங்களில் இருப்பதறகு மக்கள் போட்ட பிச்சைஎன்பதை
மறந்துவிடாதீர்கள் உங்களின் சுயநலத்துக்காக செயறபடாமல் மக்களின் நலத்துக்காய் செயற்படுங்கள்
கடவுள் புண்ணியமாவது கிடைக்கும்

வவுனியாவில் விற்பனையான புழுக்கள் நிறைந்த இறைச்சியுடன் முறையிடுவதற்கு அலைந்து திரிந்த நுகர்வாளர் குறித்த சுவாரஷ்யமான செய்தியே இது.

வவுனியா இறைச்சி விற்பனை நிலையத்தில் நேற்றையதினம் (13.5.14) இறைச்சியை கொள்வனவு செய்தபோது புழுக்கள் காணப்பட்டதையடுத்து சுகாதார திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா சந்தை உள்வட்ட வீதியில் உள்ள இறைச்சி கடையொன்றில் மாட்டிறைச்சியை ஒருவர் கொள்வனவு செய்து தனது வீட்டிற்கு கொண்டு சென்று பார்வையிட்ட போது அதனுள் சிறிய புழுக்கள் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து இறைச்சியுடன் கொள்வனவு செய்தவர் வவுனியா சுகாதார வைத்திய பணிமனைக்கு சென்ற போது பொது சுகாதார பரிசோதகர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு உள்ளமையினால் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்றபோது வவுனியா பொலிஸார் இது தொடர்பாக பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்யுமாறு பணிக்கவே சம்பந்தப்பட்ட நபர் பிரதேச செலயகத்திறகு சென்று முறைப்பாடு செய்த போதிலும் அவர்கள் மீண்டும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்டவர் புழுக்கள் நிறைந்த இறைச்சியுடன் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு மீளவும் சென்று முறையிடவே அவர்கள் கடிதமொன்றனை வழங்குமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

எனினும் பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்ச்சியாக பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையால் புழுக்கள் நிறைந்த இறைச்சி தொடர்பில் எவ்வித நடவடிக்கைகயும் இதுவரை எடுக்கப்பட்டவில்லை என தெரியவருகின்றது.

நீங்கள் இன்று ஆசனங்களில் இருப்பதறகு மக்கள் போட்ட பிச்சைஎன்பதை
மறந்துவிடாதீர்கள் உங்களின் சுயநலத்துக்காக செயறபடாமல் மக்களின் நலத்துக்காய் செயற்படுங்கள்
கடவுள் புண்ணியமாவது கிடைக்கும்

SHARE