வடமாகாணத்தில் உள்ள இராணுவ முகாம்கள் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் தொடர்பில் ஆய்வு நடத்தி அறிக்கைப்படுத்துமாறு, இராணுவத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

355

 

வடமாகாணத்தில் உள்ள இராணுவ முகாம்கள் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் தொடர்பில் ஆய்வு நடத்தி அறிக்கைப்படுத்துமாறு, இராணுவத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக, இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

வடமாகாணத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் 28 ஆயிரம் ஏக்கர் காணிப் பரப்பு இருந்தது.

எனினும் தற்போது 10 ஆயிரம் ஏக்கர் வரையிலேயே காணப்படுகிறது.

இதன்படி 18 ஆயிரம் ஏக்கர் காணிப்பரப்பு இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வடமாகாணத்தில் இராணுவ முகாம்கள் அமைந்துள்ள பிரதேசங்களில் தற்போது காணப்படுகின்ற நிலைமைகள் தொடர்பில் ஆய்வு செய்யுமாறு சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இந்த அறிக்கைகளின் அடிப்படையிலேயே பாதுகாப்பு அமைச்சு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

SHARE