வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராஜாவின் செயற்பாடுகள் கல்விச்சேவைக்கு இடையூறு – அதிபர் தனபாலசிங்கம் குற்றச்சாட்டு.

971

 

வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராஜாவின் செயற்பாடுகள் கல்விச்சேவைக்கு

இடையூறு – அதிபர் தனபாலசிங்கம் குற்றச்சாட்டு.

unnamed (1) unnamed

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியின் அதிபர் தனபாலசிங்கம்

அவர்களுக்கு வடமாகாணசபை பழிவாங்கும் நடவடிக்கையாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக

குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அதிபர் தனபாலசிங்கம்

வவுனியா தெற்கு கல்வி வலயத்தினால் வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா

கல்லூரிக்கு கடந்த 7 வருடங்களாக எந்தவிதமான அபிவிருத்தி திட்டங்களும்

மேற்கொள்ளப்படவில்லையென சுட்டிக்காட்டினார்.

அரசாங்க உத்தியோகத்தர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் வடமாகாணசபை

ஈடுபடுகின்றது என குறிப்பிட்ட அவர் வடமாகாணசபை உறுப்பினர் இந்திரராஜாவின்

செயற்பாடுகள் கல்விச்சேவைக்கு இடையூறாக இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அதிபர் தனபாலசிங்கம் இது விடயம் தொடரபாக

முதலமைச்சர், வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் ஆளுனர் கவனம் செலுத்த வேண்டும்

என தெரிவித்த அவர் தனது உயிருக்கும், கடமைக்கும் மாகாணசபை உறுப்பினரின்

அச்சுறுத்தல் இருப்பதால் தான் புலம்பெயர்ந்து வேறு நாட்டிற்கு செல்ல வேண்டிய

தேவை இருப்பதாக குறிப்பிட்டார். அத்துடன் தனது கடமைக்கு வடமாகாணசபை உறுப்பினர்

மற்றும் மாகாண கல்வி செயலாளரும் தடையாக இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

அவரின் மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வடமாகாணசபை

உறுப்பினர் இந்திரராஜாவிடம் கேட்டபோது

பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியின் அதிபர் தனபாலசிங்கத்தின்

குற்றச்சாட்டு தனக்கு ஆச்சரியத்தை அழிப்பதாக தெரிவித்த இந்திரராஜா அதிபர்

தனபாலசிங்கத்தினால் தனக்கு இரண்டு முறை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக

தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த வடமாகாணசபை உறுப்பினர் இந்திரராஜா

பாடசாலை சுமூகத்தின் வளர்ச்சியில் அக்கறைகொண்டுள்ளதாக தெரிவித்த அவர்

கல்விச்சமூகம் சோர்ந்து போய் வீழ்ந்து விடக்கூடாது என்பதுடன் அதை வளர்த்தெடுக்க

வேண்டிய அக்கறை தன்னிடம் இருப்பதாக தெரிவித்தார். மக்கள் 2009 ஆம்

ஆண்டிலிருந்து தன்னிடம் முறையிட்டதன் காரணமாகவே அதிபர் தனபாலசிங்கத்தின்

மீது நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவித்த அவர் அதிபர் தனபாலசிங்கத்தின்

மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மையானதா என விசாரணை மூலம் நிரூபிக்கப்பட

அதிபர் தனபாலசிங்கம் 2009 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு வகையான

குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்தும் எந்தவிதமான விசாரணைகளும் இன்றி எவ்வாறு

இருக்க முடிகிறது என கேள்வி எழுப்பினார். அதிபர் தனபாலசிங்கத்தை தான்

ஒருபோதும் எதிரியாக பார்த்ததில்லை என தெரிவித்தததுடன் அதிபர் தனபாலசிங்கம்

தன் மீதான குற்றச்சாட்டுக்களை பொய் என நிரூபிக்க வேண்டுமெனில்

விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என குறிப்பிட்டார்.

SHARE