வடிவேலு கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம்…

364

தெனாலிராமன் படத்திற்கு பிறகு வைகை புயல் வடிவேலு நடித்துவரும் படம் எலி. யுவராஜ் தயாளன் இயக்கி வரும் இப்படத்தில் வடிவேலு இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார்.

ஒரு வேடத்தில் திருடனாக நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்துக்கான படப்பிடிப்பு கலெக்டர் அலுவலகத்துக்கு முன்பு நடந்துள்ளது. அதாவது இரவு நேரத்தில் விமானங்கள் பெரும் சத்தத்துடன் செல்வதால் அங்கு சுற்றி இருக்கும் மக்களால் இரவில் சரியாக தூங்க முடியவில்லை.

இப்படி மக்கள் தூங்காமல் இருப்பதால் வடிவேலுவால் திருட்டு தொழில் சரியாக செய்ய முடியாத நிலை ஏற்படுமாம். அதனால் வேலை இல்லாமல் ஊர் சுற்றிக்கொண்டு திரியும் ஒரு கூட்டத்தை பிரியாணி வாங்கித் தருவதாக சொல்லி கலெக்டர் அலுவலகம் எதிரே பட்டினிப் போராட்டம் நடத்துவாராம் வடிவேலு

SHARE