வட்டுக்கோட்டையில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்

13

 

வட்டுக்கோட்டையில் 5 பிள்ளைகளின் தந்தை ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை, மூளாய் பகுதியை சேர்ந்த செ.மகேந்திரம் (வயது 44) என்ற நபரே நேற்றிரவு திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இக் குடும்பஸ்தர் மயக்கமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர் தொடர்ந்து மயக்க நிலையிலேயே இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் கீழே விழுந்தார் எனவும் அதற்கு பின்னர் வழமை போல சாதாரண நிலையில் இருந்ததாகவும் அவரது மனைவி வைத்தியசாலையில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவரது மூளையில் இரத்தக் கசிவு இருப்பதாக தெரிவித்து சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE