வட மாகாண சபையின் முன்னாள் நேற்று சுகாதாரத் தொண்டர்கள் சுமர் நாற்பதுக்கும் மேற்பட்டவாகள் தமது பதவிகளை நிரந்தரமாக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

363

 

வட மாகாண சபையின் முன்னாள் நேற்று சுகாதாரத் தொண்டர்கள் சுமர் நாற்பதுக்கும் மேற்பட்டவாகள் தமது பதவிகளை நிரந்தரமாக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

சபை நேற்று நடை பெற்ற வேளையில் சுகாதாரத் தொண்டர்கள் தமது பணியை நிரந்தரமாக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போதிலும் நன்பகல் வரை யாரும் இதனை கருத்தில் கொள்ளாத நிலமை காணப்பட்டது.

குறிப்பிட்ட சுகாதாரத் தொண்டர்கள் கடந்த இரண்டு வாரமாக தமது பணிப் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வருகின்ற போதிலும் உரிய ஆறுதலான பதில் எதனையும் இது வரையில் யாரும் வழங்காத நிலமையே காணப்பட்டது.

நேற்று இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து சபையின் நடவடிக்கைகளின் இடையில் வெளியே வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களான வைத்தியகலாநிதி சிவமோகன் தருமலிங்கம், சித்தார்த்தன், கஜதீபன் ஆகியவர்கள் வட மாகாண சபையின் சுகாதார அமைச்சின் செயலாளரையும் அழைத்து வந்து சபையின் வெளியால் நின்ற சுகாதாரத் தொண்டாகளுடன் கலந்துரையாடினார்கள்.

கண்ணீர் மல்க தமது சோகக் கதையை கூறியவர்கள் தாம் கடந்த காலத்தில் அரச அமைச்சரினால் நிரந்தரமாக்குவதாக கூறி ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் எதிர் காலத்திலும் இத்தகைய நிலமை ஏற்படாது தமது பணியை நிரந்தரமாக்கி தரவேண்டும் என வேண்டி நின்றார்கள்.

வெகு விரைவில் இதற்க்கான நடவடிககைகளை மேற்கொள்வதாகவும் உரியவர்களுடைய பெயர்கள் ஏற்க்கனவே அமைச்சுக்கு அனுப்பபப்பட்டுள்ளதாகவும் செயலாளரினால் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றுள்ளார்கள்.

SHARE