வட மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் மற்றும் வவுனியா அரசாங்க அதிபர் எம்.கே.பந்துல கரிச்சந்திர தலைமையில் இன்று காலை 10.00 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தில் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் இ.போ.ச ஊழியர்களுக்கும் சந்திப்பொன்று இடம் பெற்றது.

332

 

வட மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் மற்றும் வவுனியா

அரசாங்க அதிபர் எம்.கே.பந்துல கரிச்சந்திர தலைமையில் இன்று காலை

10.00 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தில் தனியார் பஸ்

உரிமையாளர்களுக்கும் இ.போ.ச ஊழியர்களுக்கும் சந்திப்பொன்று இடம்

பெற்றது.

unnamed (1) unnamed (2) unnamed (3) unnamed

 

இச் சந்திப்பில் வவுனியா மாவட்டத்தில் தனியார் பஸ் உரிமையாளர்

சங்கத்தினருக்கும் இ.போ.ச ஊழியர்களுக்குமிடையில் நீண்ட காலமாக

நிலவி வந்த நேரசூசி பிரச்சனைகள் மற்றும் தேசிய போக்குவரத்து

அமைச்சகத்தால் புதிதாக அமைக்கப்படும் பஸ் நிலையத்தில் இருந்து இரு

சாராரும் சேவையில் ஈடுபடுத்தல், தனியார் பஸ் அனுமதிப்பத்திரங்கள்

வேறு ஒருவருக்கு மாற்றம் செய்தல் அத்துடன் வெளி மாகாண பஸ்கள்

இ.போ.ச பஸ் நிலையத்தில் தரித்து செல்வதால் தனியார் பஸ்

உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் பிரச்சனைகள் தொடர்பில்

இதன்போது கலந்துரையாடப்பட்டிருந்தன.

எதிர்வரும் 11 ஆம் திகதி வட மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள்

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்திருந்தனர் என்பதும்

குறிப்பிடத்தக்கது.

SHARE