வட மாகாண மீன்பிடி அமைச்சினால் தேசிய நீரியல் வள உயிரினங்கள் அதிகார சபையின்(NAQDA) வவுனியா, மன்னார் மாவட்ட விரிவாக்கல் அதிகாரியின் ஏற்பாட்டில் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த நன்னீர் மீன்பிடி சங்கங்களுடனான கலந்துரையாடல்

151

 

வட மாகாண மீன்பிடி அமைச்சினால் தேசிய நீரியல் வள உயிரினங்கள் அதிகார சபையின்(NAQDA)

வவுனியா, மன்னார் மாவட்ட விரிவாக்கல் அதிகாரியின் ஏற்பாட்டில் வவுனியா மற்றும் மன்னார்

மாவட்டங்களைச் சேர்ந்த நன்னீர் மீன்பிடி சங்கங்களுடனான கலந்துரையாடலும் தேவை மதிப்பீடும் இன்று

19.06.2015 நடைபெற்றது.

வவுனியா மாவட்ட நன்னீர் மீனவ சங்கங்களுடனான கலந்துரையாடல் மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள

மோட்டார் போக்குவரத்து திணைக்கள மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பாமனது. மேற்படி கலந்துரையாடலில்

மீனவர்களின் தேவைகளை இனம் காணுவதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதுடன் அமைச்சினுடாக கடந்த காலங்களில்

முன்னெடுத்த செயல்த்திட்டஙகளின் மூலம் மீனவர்கள் அடையும் பயன்களை அறியக்கூடியதாக இருந்தது. குறித்த

சந்திப்பில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட 20 சங்கங்களில் 14 சங்கங்களின் தலைவர்களும்

பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அதே போண்று மன்னார் மாவட்ட நன்னீர் மீனவ சங்கங்களுடனான கலந்துரையாடல் கட்டுக்கரை குளத்தின்

அருகாமையில் அமைந்துள்ள பறப்பாங்கண்டல் மீனவ சங்க கட்டிடத்தில் மாலை 2.30 மணியளவில் ஆரம்பமானது.

இதில் மன்னார் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 14 சங்கங்களில் 11 சங்கங்கள் கலந்து கொண்டன.

மேற்படி சந்திப்பின் மூலம் இரு மாவட்டங்களையும் சேர்ந்த ஒவ்வொரு சங்கங்களிற்கும் என்ன வகையான மீன்

குஞ்சுகளை விடுவதன் மூலம் அவர்கள் சிறந்த பயனை அடைகின்றார்கள், எவ்வளவு மீன் குஞ்சுகள் தேவை, எவ்வகையான

மீன்பிடி உபகரணங்கள் தேவை மற்றும் எவ்வாறான பயிற்சிகள் வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை

உயர்த்த முடியும் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன. அத்துடன் நன்னீர் இறால் வளர்ப்பதற்கும் பல சங்கங்கள்

விருப்பம் தெரிவித்துள்ளன. இதனடிப்படையில் கண்ணாடி இழைப் படகுகளை திருத்துவதற்கான பயிற்சி, நிர்வாக

உறுப்பினர்களுக்கான ஆளுமை விருத்தி பயிற்சி மற்றும் நவீன மீன்பிடி முறைகள் போன்ற பயிற்சிகளை

தங்களுக்கு வழங்குமாறு கோரினர்;.

இறுதியாக பறப்பாங்கண்டல் மீனவ சங்கத்தினால் நடாத்தப்படும் மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்தை

பார்வையிட்டதுடன் எதிர்காலத்தில் ஏனைய குளங்களுக்கு தேவையான மீன்குஞ்சுகளை இவ் உற்பத்தி நிலையம் ஊடாக

கொள்வனவு செய்ய முடியுமா மற்றும் அதற்கான உற்பத்தித்திறன் உண்டா போன்ற விடயங்கள்

கலந்தாலோசிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடமாகாண மீன்பிடி அமைச்சின் செயலாளர் திரு. சி. சத்தியசீலன், (NAQDA) வவுனியா,

மன்னார் மாவட்ட விரிவாக்கல் அதிகாரி திரு. நிருபராஜ், அமைச்சின் பிரதம கணக்காளர், அமைச்சரின்

இணைப்பு செயலாளர் மற்றும் அமைச்சு அதிகாரிகள் பங்கேற்றனர்.

SHARE