வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் பதவி விலக தீர்மானம் எடுத்து உள்ளார்

515

வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் பதவி விலகுகின்றார் என்று அரசியல் வட்டாரங்களில் இன்று சூடு பிடித்து உள்ளது. வட மாகாண ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறியின் பதவிக் காலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நீடித்து உள்ளமையின் எதிரொலியாகவே விக்னேஸ்வரன் பதவி விலகுகின்ற தீர்மானத்தை எடுத்து உள்ளார் என்று இச்செய்திகள் கூறுகின்றன.

16
சந்திரசிறியின் முதலாவது பதவிக் காலம் நாளை நிறைவுக்கு வருகின்றது. ஆயினும் இவருக்கு இன்னொரு பதவிக் காலத்தை ஜனாதிபதி கொடுத்து உள்ளார்.
சிவில் சமூகத்தை சேர்ந்த ஒருவரையை இப்பதவிக்கு நியமிக்க வேண்டும், இராணுவ பின்னணி  உடைய சந்திரசிறியை இப்பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக கொக்கரித்து வருகின்றது.
images (1)TH26-WIGNESWARAN_1631348f
இந்நிலையில் சந்திரசிறியை ஆளுனர் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சில மாதங்களுக்கு முன் சந்தித்து பேசியபோது சி. வி. விக்னேஸ்வரன் முன் வைத்து இருந்தார். இக்கோரிக்கையை சாதகமாக ஜனாதிபதி பரிசீலித்தார், ஜூலை மாதத்தோடு ஆளுனரை வீட்டுக்கு அனுப்பி விடுவார் என்று விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு பின்பு அறியக் கொடுத்து இருந்தார்.
wig_sam

இச்சூழலில் ஆளுனர் சந்திரசிறியின் பதவி நீடிக்கப்பட்டு உள்ளமைக்கு எதிர்ப்பு வெளியிடுகின்ற வகையிலேயே பதவி விலகுகின்ற தீர்மானத்துக்கு விக்னேஸ்வரன் வந்து உள்ளார் என்று தெரிகின்றது. இதனோடு சம்பந்தப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரமுகர்கள் அவசரமாக கூட்டம் கூட அழைக்கப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

TPN NEWS
SHARE