அம்மா ”20 வருடத்தில் 64 கோடி” சொத்துக்களைத்தான் தேடியுள்ளார். இவ்வளவு சொத்துக்களையும் எப்படி தேடினார்? அவரின் வரவைவிட சொத்து அதிகமாக இருக்கிறதாம். அவ்வாறு அதிகரித்துள்ள சொத்துக்கு எவ்வித ஆதாரமும் இல்லையாம்.
அவ்வாறே, எமது வன்னி அமைச்சரும் கடந்த 20 வருடங்களில் இவ்வளவு சொத்துக்களையும் எப்படி கொள்ளையடித்தாரோ? சூரையாடினாரோ? இதனைக்கேட்க முடியாதா? எமது சட்டத்தரணிகளே இதற்கு ஒரு வழியுமே இல்லையா?
எங்கோ ஒரு மூலையில் அகதி முகாமில் அப்போதைய எம்.பிகளான சுமதிபால, அபூபக்கர் போன்றோருக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தவர். இப்போது எப்படி இவ்வளவு சொத்துகளை சேகரித்தார்? இந்த அரசாங்கம் என்ன இவருக்கு மாதாந்தம் ஒரு கோடி ரூபா சம்பளமா கொடுக்கிறது?
இவைகள் வந்த வழிகள்… பொது மக்கள் சொத்துகளை சூரையாடியதாக இருக்குமோ?
1. வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அகதி முகாமில் வாழுகின்றபோது திருமணம் முடித்தால் அவர்களின் வாழ்வை திட்டமிட்டுக்கொள்வதற்காக தலைவர் அஷ்ரப் புனர்வாழ்வு அமைச்சராக இருக்கின்றபோது அந்த குடும்பத்திற்கு 25,000 ரூபா வழங்கினார்.
அதனை இந்த றிசாட் வன்னி அமைச்சர் அமைச்சராக வந்த பிறகும் வழங்கினார். ஆனால் அதில் 12,500 ரூபாதான் வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்குகின்றபோது இரண்டு விண்ணப்பங்களில் கையொப்பங்களை இந்த வன்னி அமைச்சர் பெற்றுள்ளார். ஒவ்வொன்றிலும் 12,500 ரூபா பெற்றுக் கொண்டுள்ளேன் என எழுதப்பட்டுள்ளது.
அதன் படி இந்த அமைச்சர் 25,000 ரூபா கொடுத்துவிட்டார்.
ஆனால், இந்த அமைச்சர் அவற்றில் 12,500 ரூபாவைக் கொடுத்துவிட்டு அடுத்த 12,500 ரூபாவை தனதாக்கிக்கொண்டார். அப்பாவி அகதிகளின் அடி வயிற்றில் நெருப்பை வாரிக்கொட்டிவிட்டு சேர்த்த சொத்தாக இருக்காதா? அந்த அகதி மக்கள் வாழ்வுக்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றபோது இந்த 12,500 ரூபாவாவது கிடைத்ததே என்று கிடைத்ததை பெற்றுக் கொண்டு சென்று விட்டனர். அவ்வாறு சுமார் 237 பேருக்கு கொடுத்துள்ளார்.
எனவே, 237 ஐ 12,500 ஆல் பெருக்கிப்பாருங்கள் – 237 X 12,500 = 2962500
இவ்வாறு மக்களின் சொத்துக்களை சூரையாடிது ஒரு வழி. இவ்வாறு எத்தனையோ வழிகள் இருக்கின்றன.
2. நியாயமாக சிந்திக்கும் புத்திவான்களே! இந்த வன்னி அமைச்சரினால் வன்னி முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அடிமைத்துவம், ஒடுக்குமுறை, சொத்து சூரையாடல் என்பவற்றை நீங்கள் கொஞ்சமாவது கண்திறந்து பார்க்க மாட்டீர்களா?
உதாரணமாக, புத்தளம் தில்லையடியில் காசிம் சிட்டி என்ற ஒரு மாதிரிக்கிராமம் அமைப்பதற்காக கட்டாரிலுள்ள ஒருவரால் நிதி வழங்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் 372 வீடுகள், பள்ளிவாசல், பாடசாலை என்பன கட்டப்பட்டுள்ளன. இவைகளில் அந்த 372 வீட்டையும் கொஞ்சம் சென்று பாருங்கள் இவர் என்ன செய்து வைத்திருக்கிறார் என்று விளங்கும்.
அங்கு ஒரு வீட்டைக் கட்டுவதற்கு அந்த அறபியால் 6 அரை இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம் புத்திஜீவிகளே…! செயற்பாட்டாளர்களே…! எங்களைக் கொஞ்சம் வந்து பாருங்கள். எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வீடுகள் 6 அரை இலட்சம் பெறுமதியான வீடுதானா என்று. அதனைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும்.
சரி அவற்றில் அரை இலட்சத்தை வன்னி அமைச்சர் பெற்றுவிட்டு 6 இலட்சத்திற்காவது கட்டியிருக்கலாமல்லவா? அப்படியும் இல்லை. சரி 6 இலட்சத்திற்குத்தான் கட்டிவிட்டார். அந்த அரை இலட்சத்தைத்தான் அவர் எடுத்துள்ளார் என்று வைத்துக் கொள்வோம். அதன்படி 372 வீடுகள் அதனை 50000 ரூபாவால் பெருக்கிப் பாருங்கள்!
372 X 50000 = 18600000 ரூபா
இதில் வீடுகள் மாத்திரம்தான் சேர்க்கப்பட்டன. இங்கு கட்டப்பட்ட பள்ளிவாசலின் நிலை என்ன? பாடசாலையின் நிலை என்ன? இக்கிராமத்திற்கு வீதி அமைப்பதற்காக அறபி வழங்கிய நிதி என்ன? அப்படி இருக்கின்றபோது இப்பிரதேசத்தின் வீதியின் நிலை என்ன என்பதை வந்து பாருங்கள். அதன்போது வன்னி அமைச்சரின் விளையாட்டுக்கள் விளங்கும்.
3. உலக வங்கியால் அகதிகளுக்காக வழங்கப்பட்ட 10000 வீடு குறித்த நிலைப்பாடு. அது ஒரு நீண்ட வரலாறு. இதில் அமைச்சரின் ஜால்ரா விளையாட்டு அது ஒரு தனி ரகம்.
4. தற்போது மன்னார் மறிச்சுக்கட்டியில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் அதற்கும் புத்தளம் காசிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை. அவைகள் எப்படிப்பட்டது? அதன் நிலமைகள் என்ன? அந்த கிராமத்தை அமைப்பதற்காக அறபி ஒரு வீட்டுக்கு எவ்வளவு கொடுத்தார்?
அங்கு தற்போது அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு வீடு அமைப்பதாக இருந்தால் எவ்வளவு செலவாகும்? என்பதை முஸ்லிம் புத்திஜீவிகள், பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள் ஏன் தேடிப் பார்க்கிறார்களில்லை.
உண்மை நிலையை வந்து பாருங்கள்… அங்குள்ள வீடுகள் என்னென்ன நிலையில் அமைக்கப்பட்டுள்ளன. அப்போதாவது புரியும் இந்த வன்னி அமைச்சர் வன்னி முஸ்லிம்களின் பெயரால் எப்படி எப்படியெல்லாம் விளையாடுகிறார் என்று.
மறிச்சுக்கட்டியில் சுமார் 500 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து குறைந்தது 25000 எமது வன்னி அமைச்சர் பெற்றால் எப்படி இருக்கும். ஆனால், அந்த வீடுகளைப் பார்த்தால் அதைவிட வன்னி அமைச்சர் விளையாடியிருப்பார் என்று அழகாக விளங்கும். 500 வீடுகள் 25000 ரூபா = 12500000 ருபா
5. வன்னியில் 20 வருட அகதிகளாக இருந்து யுத்த வெற்றியின் பின்னர் மீள்குடியேறுகின்ற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுமார் 73 குளங்களை புனர்நிர்மாணம் செய்ய 436 கோடி நிதி இந்த வன்னி அமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இங்குள்ள குளங்களின் நிலையோ பரிதாபம். மீள்குடியேறிய விவசாயிகள் ஒவ்வொரு வருடமும் போதிய நீரின்றி பெரும் சிரமத்தை எதிர் நோக்குகிறார்கள்.
ஆனால், வன்னி அமைச்சரோ அனைத்து குளங்களும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு விட்டன என தெரிவித்துள்ளார். இதற்கு அவருக்கு ஒத்துப்பாடும் அரசாங்க அதிகாரிகள் இருக்கின்றமை எல்லாவற்றையும் விடக்கொடுமையாகும்.
இவ்வாறு அமைச்சரின் சொத்துக் குவிப்பை அடுக்கிக்கிட்டே போகலாம்… உங்களுக்கு வாசிப்பதற்கு நேரமிருக்காது.
இவைகளைப் பேசவும் முடியாது. ஏனெனில் வன்னி, முக்கியமாக முல்லைத்தீவு, மன்னார் மக்கள் ஒரு இரும்புத் திரைக்குள் அகப்பட்டுக் கொண்ட ஒருவகையான அடக்கு முறைக்குள் வாழ்கிறார்கள்.
இந்த மக்களின் அடிமைத்துவ வாழ்வுக்கு எப்போது விடிவு கிடைக்குமோ? அவ்வாறு மக்களை அடிமைகளாக வைத்துக்கொண்டு அமைச்சரும் அவரின் சகோதர சகாக்களும் நல்லாத்தான் விளையாடுகிறார்கள்.
இவைகள் முஸ்லிம் சமூக புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்களுக்கும் புரிவதில்லை. முஸ்லிம் சமூகமே! வன்னி முஸ்லிம்கள் என்ன தீண்டத்தகாதவர்களா?
அங்கு அம்மாவின் நிலை பரிதாபம்! மக்கள் நீதியோடு வாழ்கிறார்கள். ஆனால் இங்கு வன்னியில் வன்னி அமைச்சர் றிசாட் அனைத்திலிருந்தும் தப்பி குசியாக வாழ்கிறார். மக்களோ அடக்கு முறை இரும்புத்திரைக்குள் வாழ்கிறார்கள்.
எமக்கு எங்கே நீதி…? நீதியே உன் கண்ணை இங்கே திறப்பாயா…?
-மக்கள் நண்பன்-