வரண்ட காலநிலை: வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

16

 

காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ள சிறுவர்களுக்கு கூட இந்நாட்களில் குளிப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நாட்டில் தற்போது நிலவும் மிகவும் வரண்ட காலநிலை காரணமாக தோல் நோய்கள் அதிகரித்து வருகிறது.

இந்நிலைமையானது சிறுவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

குளிப்பதற்கான வாய்ப்பு
இதனால் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ள சிறுவர்களுக்கு கூட இந்நாட்களில் குளிப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் அவர் வழங்கியுள்ளார்.

சிறுவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு தடவைகளாவது குளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

ஒருவருக்கு தோல் நோய்கள் இருப்பின் காலையிலும் இரவிலும் சுமார் 20 நிமிடங்களேனும் நீரில் இருப்பதன் மூலம் ஓரளவு அதனை கட்டுப்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE