வரதராஜப்பெருமாள் மீண்டும் இலங்கை வருகிறார் பிச்சை பெறுக்க- சுரேஸ் அணியின் நிலை ?

346

 

இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்பது தமிழர்களின் அரசியல் வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஒன்றாகும். இவ்வொப்பந்தத்துக்கு பின்னரே அதிகாரப் பரவலின் அலகு மாகாணமாகி மாகாண சபை முறை  உருவாக்கப்பட்டு பின்னர் வடக்கும்  கிழக்கும் தற்காலிகமாக இணைக்கப்பட்டு ஓரலகு ஆகின.

தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று உண்மையாகவே எண்ணுபவர்கள், கொடிய யுத்தம் தொடரக் கூடாது என்று எண்ணுபவர்கள் தனிப்பட்ட பழி வாங்கும் எண்ணங்களை ஒரு புறம் தள்ளி விட்டு அனைவரையும் ஒன்றிணைத்து, இச்சந்தர்ப்பத்தை சரி வர பயன்படுத்தி தமிழ் மக்களின்  அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய தீர்வுக்கு வழி செய்திருக்க வேண்டும் .

உண்மையிலேயே அப்பேர்ப்பட்ட பொன்னான வாய்ப்பு ஈ.பி,ஆர்.எல்.எப் அமைப்பினருக்கே எட்டியது. அந்நேரத்தில் இந்திய இராணுவம் இலங்கையிலே நிலை கொண்டிருந்தது . இலங்கை இராணுவமோ முகாம்களுக்குள் முடக்கப்பட்டு இருந்தது, அபிவிருத்திக்கென இந்தியா கோடிக் கணக்கான ரூபாயை அள்ளிக் கொடுத்தது .

ஈ.பி.ஆர்.எல்.எப்  செயலாளர் நாயகமாக தோழர் பத்மநாபா இருந்தபோதிலும் இவ்வமைப்பின் வளர்ச்சியிலோ, கஷ்டங்களிலோ எவ்விதத்திலும் பங்கெடுத்து இராத வரதராஜப்பெருமாளே முதலமைச்சர் பதவியை தட்டி பறித்துக் கொண்டார். அது கூட பரவாயில்லை என்று ஏற்றுக் கொண்டாலும் ,மாகாண சபையை ஒழுங்காக நடத்தினார்களா என்றால் இல்லவே இல்லை .பழைய  ஈ.பி.ஆர்.எல்.எப் இல்லை என்று  கூறிக் கொண்டு புலி வேட்டை என்று புறப்பட்டனர். ஈ.பி.ஆர்.எல்.எப் இன் பொட்டம்மானான  ஜேம்ஸின்(சிவா ,சாகரன் ,அலம்பல் சிவா) உத்தரவுக்கு அமைய பொதுமக்கள் ,கல்விமான்கள் ,மாணவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதனால் இவர்கள் மீது மக்கள் ஆத்திரப்பட்டு கிளர்ந்து எழ கீழ் மட்ட தோழர்களை மாட்டி விட்டு இந்தியாவுக்கு தப்பி ஓடினர்.

இவ்வாறு பறந்த பெருமாள் இடையிடையே இலங்கைக்கு வந்து மீண்டும் ஏதாவது பதவிகள் கிடைக்குமா? என்று நோட்டம் பார்த்தார். ஆனால் மாகாண சபை காலத்து பயங்கர யுகத்தை மக்கள் இன்னமும் மறக்கவில்லை. இதனால்தான் மக்கள் திரும்ப திரும்ப ஈ.பி.ஆர்.எல்.எப் ஐ நிராகரிக்கிறார்கள் என்பதை உணர்ந்த பெருமாள் இனிமேல் திரும்பி வருவதில்லை என மீண்டும் சென்றார் .

தற்பொழுது புதிய அரசு உருவாகி, ஆட்சியில் சந்திரிகா அம்மையார் முக்கிய பங்கு செலுத்துகின்றார். இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இந்தியாவில் தங்கியிருக்கும் பெருமாள்  இந்நிலையில் மீண்டும் நாட்டுக்கு வர இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SHARE