வரலாற்றில் முதல் முறையாக வாடிகன் தேவாலயத்தில் இஸ்லாமிய வழிபாடு

474
கிருஸ்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் நிலவும் மத மாச்சர்யங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முன் முயற்சியாக கத்தோலிக்க கிருஸ்தவர்களின் தலைமை வழிபாட்டு ஸ்தலமான வாடிகன் தேவாலயத்தில் இஸ்லாமிய வழிபாடு நடைபெற உள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் போப் பிரான்சிஸ், இத்தாலியில் உள்ள வாடிகன் நகருக்கு வருமாறு இஸ்ரேல் அதிபர் ஷிமொன் பெரெஸ் மற்றும் பாலஸ்தீனிய அதிபர் மஹ்மௌட் அப்பாஸ் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார்.

அந்த அழைப்பை ஏற்று அவர்கள் இருவரும் வாடிகனுக்கு செல்லவுள்ளனர். இதனையடுத்து, வரும் ஞாயிற்றுக்கிழமை வாடிகன் தேவாலயத்தில் வழக்கமான பிராத்தனையுடன் இஸ்லாமிய தொழுகையும் நடத்தப்படுகிறது. தொழுகையின் இடையில் திருக் குர்ஆனின் வசனங்களும் வாசிக்கப்படும் என இஸ்ரேல் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

வாடிகன் தேவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டு வழிபாட்டு நிகழ்வினை உலகம் முழுவதும் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், சிலுவைப் போர்க் காலத்தில் தொடங்கி பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு இடையில் நிலவும் தீராப்பகையை ஒழித்து, இரு நாட்டுக்கும் இடையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் வரலாற்று சிறப்பு மிக்க முன் முயற்சியை போப் பிரான்சிஸ் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE