வரலாற்று வெற்றிக்கு வாழ்த்துக்கள்! மிகவும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன்: கலங்கிய இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா

11

 

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக வரலாற்று வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு, முன்னாள் ஜாம்பவான் வீரர் சனத் ஜெயசூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி தனது சொந்த மண்ணில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளதற்கு, கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கொழும்பில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

முன்னாள் ஆல்ரவுண்டர் வீரரான ருசல் அர்னால்ட், இலங்கை அணி மற்றும் அதிரடியில் மிரட்டிய அசலங்காவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த நிலையில், இலங்கையின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சனத் ஜெயசூர்யா உணர்ச்சிவசமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ’30 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அபாரமான தொடரை வென்ற இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள்! இது ஒரு உண்மையான குழுவின் முயற்சி. சிறப்பாக முடித்துள்ளீர்கள் வீரர்களே! மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.வரலாற்று வெற்றிக்கு வாழ்த்துக்கள்! மிகவும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன்: கலங்கிய இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா

இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 24ஆம் திகதி கொழும்பில் நடக்கிறது.

SHARE