வாய்மூல கேள்விகளுடன் தொடர்புடைய உறுப்பினர்களின் பிரசன்னம் காணப்படாமை குறித்து ஆராய்ந்து தீர்மானமொன்றை எடுக்க வேண்டியுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஸ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
15 வாய்மூல கேள்விகளுடன் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகியிருக்காமை தொடர்பில் சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருந்தது.
ஆளுங்கட்சி பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன, எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சியின் பிரதம கொரடா ஜோன் அமரதுங்க ஆகியோர் இதுதொடர்பான விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இம்முறை வரவு-செலவுத்திட்டத்தில் சிறிய நீர்ப்பாசன திட்டங்களுக்காக இரண்டாயிரம் மில்லியன் ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து திருப்தியடைகின்றீர்களா? எனவும் நீர்ப்பாசன அமைச்சரிடம் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார்.
இதன்போது சபாநாயகர் சமல் ராஜபக்ஸ குறுக்கிட்டார்.
வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தை இன்று ஆரம்பித்து உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம், இம்முறை வரவு-செலவுத்திட்டம் ஒரு கண்கட்டு வித்தையாகும் எனக் கூறினார்.
இந்த வரவு-செலவுத்திட்டத்திற்கு எதிர்கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் பெரும் குழப்படைந்துள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.
இதனையடுத்து உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன், தமிழ் மற்றும் சிங்கள மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வற்காக அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
இன்றைய விவாதத்தில் கலந்துகொண்ட அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன, மக்கள் விடுதலை முன்னணி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் ஜயமக, சபைக்குள் கெரட் கிழங்குகள் சிலவற்றை எடுத்துச்சென்றதை அடுத்து, அதுகுறித்து பாராளுமன்றத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
புலம்பெயர் தமிழர்கள் தனியான தமிழ் நாட்டுக்காக அழுத்தங்களை கொடுக்கவில்லை எனவும் அவர்கள் தமிழர்களுக்கான அர்த்தமுள்ள அரசியல் தீர்வுக்கே அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்