வருங்கால நடிகர் TTF வாசன் விபத்தில் சிக்கி கை உடைந்தது.. தற்போதைய நிலை என்ன தெரியுமா

44

 

பைக் ரைடு மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் TTF வாசன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட பைக்கில் விதிமுறையை மீறி அதிவேகமாக சென்றதனால் இவர் மீது போலீஸ் ஆக்ஷன் எடுத்தது.

இதன்பின் அதையெல்லாம் சரி செய்த TTF வாசன் தான் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவிருப்பதாக அறிவித்தார். மஞ்சள் வீரன் எனும் படத்தில் தான் ஹீரோவாக நடிக்கிறேன் என First லுக் போஸ்டரை கூட வெளியிட்டு இருந்தார்.

விபத்து
இந்நிலையில், தமிழ் சினிமாவின் வருங்கால நடிகரான TTF வாசன் நேற்று பொது இடத்தில் பைக்கில் அதிக வேகமாக சென்று வீலிங் அடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கை உடைந்து இருப்பதால், அவருக்கு மாவு கட்டு போடப்பட்டுள்ளது. மேலும் தற்போது TTF வாசன் தனது நண்பரின் வீட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE