வலிகாமம் பகுதியில் உள்ள கிணறுகளில கழிவு ஓயில கலந்துள்ளமை குறித்த கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

349

 

வலிகாமம் பகுதியில் உள்ள கிணறுகளில கழிவு ஓயில கலந்துள்ளமை குறித்த கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் பளிக்ககார, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண விவசாய மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், பிரதேச சபைகளின் தலைவர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், சுகாதார வைத்தியதிகாரிகள், சுற்றுச் சூழுல் அமைப்பினர், தூய நீருக்கான செயலணியின் உறுப்பினர்கள், வட மாகாண சபையால் நியமிக்கப்பட்ட சுற்றுச் சூழுல் நிபுணர் குழு உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்துக்கு ஊடகவியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. வடக்கு மாகாண ஆளுநரின் பணிப்புக்கமையவே ஊடகவியலாளர்கள் இந்தக் கூட்டத்துக்கு அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

vetanajakang987488956

SHARE